பாஜக எம்.பி வீட்டில் சாப்பிட போன வெங்கய்யா நாயுடுவுக்கு ஷாக்... செருப்ப ஆட்டைய போட்டுட்டாங்கப்பா!
பெங்களூரில் பாஜக எம்பி வீட்டில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பிய வெங்கய்யா நாயுடு வெறுங்காலுடன் தான் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அவரின் காலணிகளை யாரோ ஆட்டைய போட்டது தான் இதற்கு முக்கிய காரணம்
பெங்களூரு : பெங்களூரில் பாஜக எம்பி வீட்டிற்கு காலை உணவு சாப்பிடச் சென்ற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெறுங்காலுடன் திரும்ப வேண்டியதாயிற்று. உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது வெங்கய்யா நாயுடுவின் காலணியை யாரோ திருடிச் சென்றது தான் இதற்கு முக்கியக் காரணம்.
நாட்டில் கோவில், திருவிழா, திருமண வீடுகளில் செருப்பு காணாமல் போவது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிற்கு நேர்ந்த இந்த நெருடலான நிலை வேறு யாருக்குமே ஏற்பட்டிருக்காது. பெங்களூரில் பாஜக எம்பி ஒருவரின் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட விருந்தாளியாக சென்றுள்ளார் வெங்கய்ய நாயுடு.

பாஜக எம்பி பிசி மோகன் வீட்டில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் அவரது நலன் விரும்பிகள், அவரை பார்க்க விரும்பியவர்களை சந்தித்து உரையாடியுள்ளார் வெங்கய்யா நாயுடு. மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடக எம்எல்ஏக்கள் சிடி ரவி மற்றும் ஜெகதீண் ஷெட்டர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த வெங்கய்யா நாயுடுவிற்கு ஒரு ஷாக் விஷயம் காத்திருந்தது. தனது ஷூவை போட சென்றவர் அதனை காணாமல் சங்கடமடைந்து நின்றார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளும், கட்சியினரும் அவரது காலணி எங்கே என்று துளாவினார்கள். ஆனால் யாருக்கும் கிடைக்கவில்லை.
வெங்கய்ய நாயுடுவை பார்க்க பலரும் வந்து சென்றதால் அவர்களில் யாரேனும் காலணியை மாற்றி போட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனையடுத்து அவரின் உதவியாளர்கள் அருகில் இருந்த கடைக்கு சென்று புதிய ஜோடி ஷூக்களை வாங்கி வந்து கொடுத்தனர். காலணியை காணவில்லை என்ற வெறும் காலுடன் நிற்கும் நிலை துணை குடியரசுத் தலைவருக்கே ஏற்பட்டது. இந்த திடீர் சம்பவத்தால் வெங்கய்யா நாயுடுவின் அன்றைய நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications