சிக்கிமில் இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பு- அட்டகாசம் வைரலாகும் வீடியோ
சிக்கிமில் அத்துமீறி எல்லைக்கட்டுப்பாட்டை தாண்டி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காங்டாங்: சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா- பூடானின் எல்லையில் டோக்லாம் பீடபூமியை சீனா தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதியில் சாலை அமைக்கவும் சீனா முயற்சித்ததை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.

போர் பதற்றம்
இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அப்படி நுழைந்த சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுக்க இருதரப்புக்கும் கைகலப்பானது. இதனால் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தில் இருக்கிறது.

எல்லையில் ராணுவம் குவிப்பு
சீனா உக்கிரமாக ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக நமது ராணுவமும் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு போரைப் போல கடுமையாக பதிலடி தருவோம் என்றெல்லாம் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.

கோழி கழுத்துக்கு குறி
ஆனால் 1962-ம் ஆண்டு இந்தியா என்பதே வேறு; இப்போதைய இந்தியாவின் வலிமை என்பது வேறு என்பதை சீனா புரிந்து கொள்ளவில்லை. டோக்லாம் பீடபூமியை நெருங்கிவிட்டால் இந்தியாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடிய கோழிகழுத்துப் பகுதியான சிலிகுரி பிராந்தியத்துக்கு பேராபத்து என்பதால் ராணுவம் உச்சகட்ட உஷார் நிலையில் இருந்து வருகிறது.
வைரலாகும் வீடியோ
இதனிடையே சிக்கிம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் வட இந்திய சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி இருந்தன. இப்போது எடிட் செய்யப்பட்டாத முழுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications