பார்களை திறக்க ரூ1 கோடி லஞ்சம்: கேரளா நிதி அமைச்சர் கே.எம். மானி மீது விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மூடப்பட்ட பார்களைத் திறக்க ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக நிதி அமைச்சர் கே.எம். மானிக்கு எதிரான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக பார்களையும் கடைகளையும் அம்மாநில அரசு மூடியது. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை திறக்கிறேன் என உறுதி அளித்து பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜூ ரமேஷிடம் ரூ1 கோடி லஞ்சம் வாங்கினார் நிதி அமைச்சர் கே.எம். மானி என்பது புகார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மானி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
கடந்த ஜூன்மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை எனவும் முடிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட்னா.
இவற்றை விசாரித்த நீதிமன்றம், நிதி அமைச்சர் கே.எம். மானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications