அடிபம்பில் தண்ணீர் அருந்தும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ!
மேற்கு வங்க மாநிலத்தில் அடிபம்பில் தானே தண்ணீர் அடித்துக்குடிக்கும் குட்டி யானையின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடிபம்பில் தானே தண்ணீர் அடித்துக்குடிக்கும் குட்டி யானையின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Recommended Video
மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜல்தாபாரா தேசிய பூங்கா. வனவிலங்குகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த பூங்காவில் தான் இந்தியாவில் அதிகளவில் ஒன்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்து வருகின்றன.
கிழக்கு இமயமலை அடிவாரப் பகுதியில் தோர்சா நதியையொட்டி அமைந்துள்ள ஜல்தாபாரா வனத்தில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், விதவிதமான மான்கள், காட்டுப்பன்றிகள் என பலவகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பல வகையான பறவைகளும் இந்த வனத்தில் பறந்து திரிகின்றன.

மீட்கப்பட்ட யானைகள்
இப்பேர்ப்பட்ட இந்த வனத்தில் ஆபத்தில் சிக்கிய ஒரு தாய் யானையையும், அதன் குட்டியையும் மீட்டு பூங்கா நிர்வாகம் பராமரித்து வருகிறது. அந்த குட்டி யானை வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகிறது.

புத்திசாலி குட்டி யானை
அப்படி சுற்றித்திரியும் போது ஒருநாள் அந்த குட்டி யானைக்கு தண்ணீர் தாகம் எடுத்துவிட்டது. சுற்றி முற்றி பார்த்த போது அங்கு ஒரு அடிபம்பு அதன் கண்ணில் தென்பட்டது. சற்றும் யோசிக்காத அந்த புத்திசாலி யானை, அடிபம்பை தனது தும்பிக்கையால் அடித்து, தண்ணீர் பருகியது.

நெட்டிசன்கள் பாராட்டு
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. யானையின் புத்திசாலி தனத்தை எண்ணி நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ராமநாராயணன் படங்களை போல..
இந்த வீடியோவை பார்க்கும் போது இயக்குனர் ராமநாராயணின் திரைப்படங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் அவர் படத்தில் தான் விலங்குகள் எல்லாம் மனிதர்களை மிஞ்சும் வகையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications