டெல்லியில் மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு.. அடிக்கடி வாங்க என்று சொல்லியனுப்பிய மோடி
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிகள் இன்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
அப்போது, அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

இதை நிருபர்களிடம் பிறகு தெரிவித்த ராகுல் காந்தி, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே விவசாயப் பிரச்சினைகள் வலுத்துள்ளது. நரேந்திர மோடியை சந்தித்தோம். அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்.
இதனிடையே, மக்கள் பிரச்சினைக்காக இப்படி அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் என ராகுல் காந்தியிடம் மோடி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்து மோடி அரசுக்கு நெருக்கடி தர காங்கிரஸ் குழு இன்று அவரை சந்தித்திருக்கலாம் என தெரிகிறது.
சமீபத்தில்தான், 'பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஊழலில் ஈடுபட்டது குறித்த விரிவான தகவல்கள் என்னிடம் உள்ளன' என்று அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை ராகுல் காந்தி தெரிவித்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications