சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டாரா தமிழிசை சௌந்தரராஜன்?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி கூறி தீட்சிதர் அவமதித்தாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்னை வேறு இடத்தில் அமர சொன்னது உண்மைதான் ஆனால் அவமதிக்கவில்லை, எந்த பிரச்னையும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத்தோடு ஆனித் திருமஞ்சனம் தொடங்கியது.
இந்நிலையில் ஆனித் திருமஞ்சனம் மஹாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள இன்று அதிகாலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றிருந்தார். சாமி தரிசனம் செய்துமுடித்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கோயில் வளாகத்தில் அமர்ந்துள்ளார். அப்போது அவரிடத்தில் தீட்சிதர்கள் அங்கே அமரக்கூடாது என்று கூறியதாக தகவல்கள் அதிகமாக பரவின.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் பரவ தொடங்கியது.
இதனிடையே புதுச்சேரிக்குச் சென்ற அவர் அங்கு அம்மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- உபி: தெய்வ படங்கள் பேப்பரில் அசைவ பொட்டலம் கட்டிய ஓட்டல் உரிமையாளர் கைது
- "அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம், தடை விதிக்க இயலாது" - உச்ச நீதிமன்றம்
அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம், சிதம்பரம் கோயில் வளாகத்தில் உள்ள படியில் அமர்ந்தபோது, அங்கே அமரக்கூடாது என்று தீட்சிதர்கள் கூறி உங்களை அவமதித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு சிரித்தபடி மறுப்பு தெரிவித்தார்.
'நடந்தது உண்மைத்தான் ஆனால் அவமதிக்கவில்லை'
அது குறித்துப் பேசிய அவர், "என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, அந்த பக்கம் நிறைய இடம் உள்ளது என்றும் அங்கே சென்று அமரும்படியும் கூறினார். அதற்கு நான் இறைவனைப் பார்க்கவந்தேன் இங்கே தான் உட்காருவேன் என்று கூறினேன். அதைக்கேட்டு அவரும் சென்றுவிட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. இறைவனை பார்க்க போனேன். அதை யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மற்ற எல்லா தீட்சிதர்களும் இறைவனுக்கு படைத்த மாலை, பிரசாதம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்தனர் என்றார்.
சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன்னாள் பிரச்னை வருவதாக கூறிய தமிழிசை ஆனால் தனது விஷயத்தில் எந்த பிரச்னையில்லை என்று கூறினார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் தரப்பில் கூறுவது என்ன?
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், "அவர்களை எந்த விதத்திலும் அவமரியாதை படுத்தியோ, அலட்சியப் படுத்தியோ அவர்களை நிராகரிக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த இடத்தில் பிரம்மோற்சவம் என்ற தேரோட்டத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது என்பதால், சில இடங்கள் உபயம் செய்பவர்களுக்காகவும், கோயில் முக்கிய நிகழ்விற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கே இருப்பவர், இல்லாதவர் என்று பாரபட்சமின்றி பரம்பரை பரம்பரையாக உபயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் ஆளுநரிடத்தில் கொஞ்சம் இப்படி அமரும்படி வேண்டுகொள் வைத்தோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டு, நின்று சாமி தரிசனம் செய்து சந்தோஷமாகத் தான் சென்றுள்ளார்," என்று கோயில் தரப்பில் ஐயப்ப தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=xa8Szu225rI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications