பலாத்காரத்திற்கு எதிராக கொந்தளிக்கும் 2 பெண்கள்: தீயாக பரவும் வீடியோ
மும்பை: பலாத்காரத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த 2 பெண்கள் வெளியிட்டுள்ள ராப் வீடியோ இணையதளத்தில் பிரபலம் ஆகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி நிர்பயா பற்றிய ஆவணப் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு பலாத்காரத்தை எதிர்த்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பங்குரி அவஸ்தி மற்றும் உப்பெகா ஜெயின் ஆகிய 2 பெண்கள் பலாத்காரத்தை எதிர்த்து ராப் வகையில் பாடி, பேசி வீடியோ ஒன்றை நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த பெண்கள் நம் நாட்டில் நடக்கும் பலாத்காரங்கள், பெண் சிசு கொலை, பெண்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறேன் என்ற பெயரில் அடித்து துன்புறுத்துவது உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளனர்.
நிர்வாணத்தை அண்டவிடாமல் இருப்பவர்கள் தான் கூகுகளில் அதிகமாக சன்னி லியோனை தேடுகிறார்கள் என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நினைத்து அவர்கள் கோபத்தில் பொங்கியுள்ளனர். நாங்கள் மினி ஸ்கர்ட் அணிந்தாலும் அதை சம்மதம் என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications