For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கங்கனா ரனாவத்தை பாஜகவுக்கு வரவேற்கிறோம்.. ஆனால்.." ஜேபி நட்டா சொல்லிய அந்த ஒரு வார்த்தை!

Google Oneindia Tamil News

சிம்லா: நடிகை கங்கனா ரனாவத்தை பாஜகவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தாம்தூம், தலைவி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். அண்மைக் காலமாக நடிகை கங்கனா ரனாவத், பிரதமர் நரேந்திர மோடி ஆதரவாளராகவும், வலதுசாரி தத்துவங்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு எதிரான மக்களின் போரட்டங்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தவர். இதனால் விரைவில் நடிகை கங்கனா ரவாவத் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராமஜெயம் வழக்கு.. 10 ஆண்டுகளுக்கு துப்பு துலங்குகிறது.. உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்! ராமஜெயம் வழக்கு.. 10 ஆண்டுகளுக்கு துப்பு துலங்குகிறது.. உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்!

கங்கனாவின் அரசியல் ஆசை

கங்கனாவின் அரசியல் ஆசை

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், மக்கள் விரும்பினால் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். பாஜக மேலிடம் தனக்கு சீட் கொடுத்தால், நிச்சயம் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். தனது அரசியல் ஆசையை கங்கனா வெளிப்படையாக அறிவித்தார்.

ஜேபி நட்டா வரவேற்பு

ஜேபி நட்டா வரவேற்பு

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சிம்லா சென்றுள்ளார். அப்போது நடிகை கங்கனா ரனாவத்தின் அரசியல் பிரவேச ஆசைப் பற்றி ஜேபி நட்டாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கங்கனா ரனாவத் பாஜகவிற்கு வருவதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கங்கனாவுக்கு வாய்ப்பு?

கங்கனாவுக்கு வாய்ப்பு?

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜேபி நட்டாவிடம், கங்கனா ரனாவத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேபி நட்டா, கட்சிக்காக யார் உழைக்க விரும்பினாலும் அவர்களுக்கு பாஜக இடமளிக்கும். அந்த வகையில் கங்கனா ரனாவத்தை வரவேற்கிறோம். ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது என்பது நான் ஒருவன் எடுக்கும் முடிவல்ல.

கட்சியின் முடிவு

கட்சியின் முடிவு

அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும். யார் வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம். ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் நடிகை கங்கனா ரவானத் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Party's national president JP Natta has said that he welcomes actress Kangana Ranaut to the BJP. But he said, the decision to contest the elections will be taken only after consultation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X