"மது, பலாத்காரம், மிரட்டல்.." அந்தமான் கூட்டு பலாத்காரத்தில் நடந்தது என்ன? இளம்பெண் கண்ணீர்
பிளேயர்: அந்தமான் தீவுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம் பெண்களைப் பலாத்காரம் செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த மாதம் முன்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் மீது பாலியல் பலாத்கார புகாரை அளித்து இருந்தார்.
அதாவது வேலை வாங்கி தருவதாகக் கூறி ஜிதேந்திர நரேன் மற்றும் அப்போது தொழிலாளர் ஆணையராக இருந்த ரிஷி ஆகியோர் தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார்.

கூட்டுப் பலாத்காரம்
மது குடிக்கச் சொல்லி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் பின் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீதான இந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில், உள் துறை அமைச்சகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஜிதேந்திர நரேனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதிர்ச்சி தகவல்
இதேபோல சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அங்கு பணியாற்றிய ஊழியர்களே சில சமயம் பெண்களை அழைத்து வந்ததாகக் கூறி இருந்தனர். இதனிடையே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் இந்த பலாத்கார சம்பவம் குறித்து அந்த பெண் கூறிய சில தகவல்களைப் பகிர்ந்து உள்ளது.

குழந்தைப் பருவம்
வாரணாசியைச் சேர்ந்த தலித் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை இவர். அவர் இரண்டு வயதிலேயே தனது தாயை இழந்தார். ஓவியரான அவரது தந்தை சில மாதங்களில் வேறு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இதனால் குழந்தைப் பருவத்தில் இருந்த பல பிரச்சினைகளை அந்த பெண் சந்திக்கத் தொடங்கியுள்ளார். எந்த சமயத்திலும் அவருக்கு உடுத்த புதிய ஆடைகள் இருந்தது இல்லை. பெற்றோரின் அரவணைப்பு என்றால் என்ன என்று கேட்கும் சூழலிலேயே அவர் வளர்ந்தார்.

10 ரூபாய் தான்
17 வயதிலேயே அவரது சித்தி படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல வற்புறுத்தி உள்ளார். சேல்ஸ் கேர்ளாக பணிபுரிந்த அவருக்கு மாதம் 7,000 ஊதியம். இருப்பினும், அதை அப்படியே வாங்கிக் கொள்ளும் அவரது சித்தி தினசரி செலவுக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே கொடுப்பாராம். அதன் பின்னர் பல்வேறு வேலைகளைச் செய்த அவர், ஒரு கட்டத்தில் சுற்றுலா வழிகாட்டியாக மாறிவிட்டார்.

பாதுகாப்பு
அப்போது தான் இந்த கொடூரம் நடந்து உள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. இப்போது 21 வயதான அந்த பெண்ணுக்குத் திருமணம் நடந்துவிட்டது. இது குறித்து புகார் அளித்த போது, முதலில் புகாரைப் பதிவு செய்யவே போலீசார் மறுத்துள்ளனர். 45 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னரே புகாரையே பதிவு செய்துள்ளனர். இப்போது அந்த பெண்ணின் பாதுகாப்பிற்காக மூன்று போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

மிரட்டல்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் பிறந்ததில் இருந்தே என் வாழ்கையில் பிரச்சினைகள் மட்டுமே இருக்கிறது. அது இன்னும் தொடர்கிறது. சுமார் மூன்று மாதங்களாக நான் என் அறைக்குள் அடைக்கப்பட்டு உள்ளேன். இப்போது நான் அச்சத்திலேயே இருக்கிறேன். முதல்முறை பலாத்காரம் நடந்த பின்னரும் இரண்டாம் முறை ஏன் அங்குச் சென்றேன். என்றே பலரும் என்னைக் கேட்கிறார்கள். அந்தமானில் வேலை வாங்க வேண்டுமென்றால் அவர்கள் தயவு தேவை என்ற மிரட்டினார்கள். இதனால் தான் வேறு வழியின்றி சென்றேன்"என்றார்.

தொடரும் கொடூரம்
அதன் பின்னரும் வேலை கொடுக்காமல் மிரட்டத் தொடங்கியதால், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்தே அவர் புகார் அளித்துள்ளார். ஆனால், விசாரணை என்ற பெயரில் தன்னை அலைக்கழிப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் விசாரணையில் சொல்லவே கூச்சப்படும் அளவுக்கான கேள்விகளையும் அதிகாரிகள் கேட்பதாக வேதனையுடன் சொல்கிறார். இருப்பினும், அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் இந்த பெண், தன்னை போல மற்றொரு பெண் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்,
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications