Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரபிக்கடலில் விழுந்த கடற்படை ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது? உதவ போனவர்களுக்கு இப்படியா ஆகணும்? கடவுளே

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் காயமடைந்தவரை மீட்க சென்ற இந்திய கடற்படையின் இலகுரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்திய தேசியக்கொடியுடன் கூடிய மோட்டார் டேங்கர் ஹரிலீலா கப்பல் நின்றது. இந்த கப்பலில் இருந்து அவசர மருத்துவ உதவிக்காக கடற்படையிடம் நேற்று இரவு உதவி கோரப்பட்டது.

indian coast guard helicopter gujarat

ஹரிலீலா கப்பலில் இருக்கும் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ உதவி கோரப்பட்டது. இந்திய கடற்படை சார்பில் ஏஎல்எச் எனும் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH or Advanced Light Helicopter) அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 4 பேர் பயணித்தனர். இரவு 11 மணியளவில் ஹெலிகாப்டர் அவசரமாக அரபிக்கடலில் தரையிறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் தண்ணீரில் விழுந்து (ஹார்ட் லேண்டிங்) நொறுங்கியது. இதனால் அதில் இருந்த 4 பேரும் மாயமாகினர். இதுபற்றி அறிந்தவுடன் கடற்படை சார்பில் மீட்டு பணி தொடங்கப்பட்டது.

2 விமானங்கள், 4 கப்பல்கள் மூலம் மீட்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி என்பது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றி இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய கடற்படையின் எக்ஸ் பக்கத்தில், ‛‛செப்டம்பர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அரபிக்கடலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் இரவு 11 மணிக்கு மோட்டர் டேங்கர் ஹரிலீலாவில் உள்ளவரை மீட்க சென்றது. மீட்பு பணியின்போது அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இந்த வேளையில் கடலில் ஹெலிகாப்டர் மோதியது. இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் 4 கப்பல்கள், 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் பற்றி இந்திய கடற்படை சார்பில் முக்கிய தகவல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛இந்திய கடற்படைக்கு சொந்தமான மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் குஜராத்தில் சமீபத்தில் ஏற்பட்ட புயலின்போது மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மொத்தம் 67 பேரின் உயிரை இந்த ஹெலிகாப்டர் காப்பாற்றது. நேற்று இந் இலகுரக ஹெலிகாப்டர் இரவு 11 மணிக்கு மோட்டர் டேங்கர் ஹரிலீலாவில் உள்ளவரை மீட்க சென்று அவசரமாக தரையிறங்கியபோத விபத்தில் சிக்கியது.

உதவி கோரிய கப்பலை நெருங்கி கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 3 பேரை தேடும் பணி நடக்கிறது. ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியின்போது அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இந்த வேளையில் கடலில் ஹெலிகாப்டர் மோதியது. இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 3 பேரை தடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் 4 கப்பல்கள், 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+