"பக்கா திட்டம், களமிறங்கும் பாஜக!" ஜார்கண்ட் தேர்தலுக்கு போடும் கணக்கு! சத்தமே இல்லாமல் எல்லாம் ஓவர்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. சம்பாய் சோரன் வருகையால் இந்த முறை நம்பிக்கையும் பாஜக களமிறங்கும் நிலையில், இந்த முறை பாஜகவின் யுக்தி என்னவாக இருக்கும் என்பது குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்ண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அங்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது.

jharkhand assembly election 2024 bjp jharkhand politics

இன்னும் தேர்தல் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடாத போதிலும், பாஜக முதல் கட்சியாக அங்குத் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சட்டசபைத் தேர்தல்: இதற்கிடையே ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்கான திட்டத்தை பாஜக இறுதி செய்ய உள்ளது. அங்குக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டது. அதேநேரம் சீட் பகிர்வு உடன்படிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும் எனத் தெரிகிறது.

ஓரிரு நாட்கள்: ஜார்க்கண்டில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், ஏஜேஎஸ்யு கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அசாம் முதல்வரும் பாஜக ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் அறிவித்தார். மேலும், சீட் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு நாடுகளில் எந்தக் கட்சி எத்தனை சீட்களில் போட்டியிடும் என்பது இறுதி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜார்கண்ட் தேர்தலில் ஏஜெஎஸ்யு மற்றும் ஜேடியு உடன் கூட்டணி வைத்து அமைத்துப் போட்டியிடும். சீட் பகிர்வில் 99 சதவீதம் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. இப்போது ஓரிரு இடங்கள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுவும் மிக விரைவில் இறுதி செய்யப்படும்" என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுதான் பிளான்: கூட்டணி ஒரு பக்கம் என்றால் சம்பாய் சோரனின் வருகையும் பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்திருந்த போது இந்த சம்பாய் சோரன் தான் முதல்வராக இருந்தார். இந்த சம்பாய் சோரன் சமீபத்தில் தான் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். இவர் இப்போது தங்கள் கட்சிக்கு வந்துள்ளதால் பாஜக அங்கு புதிய நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கூட்டணி + வலுவான தலைவரான சம்பாய் சோரன் தங்களுடன் இருப்பது வெற்றியை பெற்று தரும் என பாஜக நம்புகிறது.

ஜா்கண்ட் தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை வரும் நவ.- டிசம்பர் காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மொத்தம் 81 சீட்கள் உள்ள நிலையில், 41 இடங்களில் வெல்லும் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். ஆளும் ஹேமந்த் சோரன் கட்சி காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்குகிறது.

கடைசி தேர்தல்: கடந்த தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஜேஎம்எம் கட்சி 30 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. 16 இடங்களில் காங்கிரஸ் வென்ற நிலையில், அங்கு இரு கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது. அப்போது ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த பாஜக 25 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+