"சித்த பிரமை".. முடியை பிடித்துக்கொண்டு கத்தி அழுத பள்ளி மாணவிகள்! பேய் பிடித்த மாதிரி! பரபர வீடியோ
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவிகள் பலர் சித்த பிரமை பிடித்தது போல கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பள்ளிகளில் சமீப நாட்களாக விசித்திரமான சம்பவம் ஒன்று நடக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் பள்ளிகளில் மாணவிகள் பலரும் பேய் பிடித்தது போல கத்தி கதறும் சம்பவங்கள் அதிகம் நடக்க தொடங்கி உள்ளன.
வகுப்பில் படிக்கும் மாணவிகள் திடீரென வெளியே வந்து ஓ என்று கத்தி.. தலை முடியை பிடித்து இழுத்து அழும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.

உத்தரகாண்ட்
இந்த நிலையில்தான் தற்போது உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் ரைக்குழி கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் மாணவிகள் பலர் வகுப்பிற்கு வெளியே அமர்ந்து ஓ என்று கத்தி.. தலை முடியை பிடித்து இழுத்து அழுவது போல் காட்சிகள் உள்ளன. பலர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல கோஷமிட்டு, கத்திய காட்சிகள் இதில் பதிவாகி உள்ளன. பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.

மாணவிகள் வகுப்பு
பல அரசு பள்ளிகளில் அருகில் உள்ள கிராமங்களில் மாணவிகள் இப்படி சித்த பிரமை பிடித்தது போல நடந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் நன்றாக இருக்கும் மாணவிகள் வகுப்பிற்கு வந்ததும் இப்படி நடந்து கொள்கிறார்கள். படிப்பில் ஆர்வமுடன் இருக்கும் மாணவிகளும் கூட இப்படி பிரம்மை பிடித்தது போல நடந்து கொள்கிறார்கள். சிலர் தலையை சுவற்றில் முட்டிக்கொள்கிறார்கள்.

குழப்பம்
சிலர் அங்கும் இங்கும் பேய் பிடித்தது போல வேகமாக ஓடுகிறார்கள். சிலர் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர், என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளிக்கு சாமியாரை அழைத்து வந்த பூஜையும் செய்து உள்ளனர். ஆனால் மாணவிகள் இப்படி நடந்து கொள்வதற்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.

என்னாச்சு?
சாமியார் வந்து இரண்டு முறை பூஜை போட்ட பின் மாணவிகள் கொஞ்சம் சரியாகி உள்ளனர். ஆனால் மீண்டும் மறுநாள் இதேபோல் அவர்கள் நடக்க தொடங்கி உள்ளனர். அந்த மாநிலத்தையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இவர்களுக்கு எல்லாம் மாஸ் ஹிஸ்டிரியா என்ற கூட்டு பாதிப்பு ஏதாவது இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை இணைக்கும் ஒரே விஷயம் மதிய உணவுதான் என்பதால், அதில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications