தேசிய பாதுகாப்பு சட்டம், 7 எப்.ஐ.ஆர்கள்.. அம்ரித் பால் சிங்கிற்கு அடுத்து என்ன? எவ்வளவு காலம் சிறை?
அமிர்தசரஸ்: பல கிரிமினல் வழக்குகள் அம்ரித் பால் சிங் மீது இருப்பதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீண்ட காலம் அம்ரித் பால் சிங் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார் என்பது பல்வேறு தரப்பினரும் சொல்லும் கருத்தாக உள்ளது.
மறைந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் டி'. இந்த அமைப்பை தற்போது அம்ரித் பால் சிங் நடத்தி வருகிறார். இவரது நடவடிக்கைகள் பஞ்சாப் அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், அஜ்னாலா நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் அம்ரித் பால் சிங் சென்றார்.
அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த தனது கூட்டாளியை விடுவிக்க கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் படையெடுத்துச் சென்று முற்றுகையிட்டனர். இந்த மோதலில் காவல்துறை உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

நிலைமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீசார் விடுவித்தனர். இந்த விவகாரம் பஞ்சாப் மாநில காவல்துறைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், அம்ரித்பால் சிங்கை கைது செய்தே ஆக வேண்டும் என்பதில் பஞ்சாப் மாநில அரசு முழு வேகத்துடன் இறங்கியது. இதற்கான நடவடிக்கையில் பஞ்சாப் அரசு இறங்கியதும் , உஷாரான அம்ரித் பால் சிங் தலைமறைவு ஆனார்.
அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளிகள் பலரை கைது செய்த போதிலும் அவரை கைது செய்ய முடியவில்லை. அரியானா, டெல்லி என பல மாநிலங்களுக்கு சென்று போக்கு காட்டி வந்த அம்ரித் பால் சிங்கை பிடிக்க முடியாமல் பஞ்சாப் போலீஸ் தடுமாறியது. இந்த நிலையில், அம்ரித்பால் சிங் பஞ்சாபின் மோகா மாவட்டத்தின், ரோட் கிராமத்தில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அம்ரித் பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அசாமில் உள்ள சிறைச்சாலைக்கு அம்ரித் பால் சிங் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்ரித் பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் தவிர 7 வழக்குகள் உள்ளன. இதனால், அவர் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவருவது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை ஜாமீன் இன்றி சிறையில் அடைக்க முடியும். அதன் பிறகு இந்த காவலை ஒரு ஆண்டு வரை நீட்டிக்க முடியும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், குறிப்பிட்ட அந்த நபரை கைது செய்து இருக்கிறோம் என்று தெரிவித்தால் மட்டும் போதும். உயர் நீதிமன்ற அட்வைசரி போர்டில் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நபர் முறையிட முடியும். அவர் வழக்கறிஞர் கூட வைத்துக்கொள்ள முடியாது.
அம்ரித் பால் சிங் மீது காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது முதல் ஆயுத சட்டம் வரை வழக்குகள் உள்ளது. இதனால், தற்போதைக்கு அம்ரித் பால் சிங்கால் சிறையில் இருந்து வெளி வர முடியாது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு இருப்பதால் குறைந்தது மூன்று மாதங்களுக்கு வெளியில் வருவதை நினைத்து கூட பார்க்க முடியாது.
அதன்பிறகு ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம். பல கிரிமினல் வழக்குகள் அம்ரித் பால் சிங் மீது இருப்பதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீண்ட காலம் அம்ரித் பால் சிங் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார் என்பது பல்வேறு தரப்பினரும் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications