பிஎம்டபிள்யூ கார், 150 சவரன் நகை தரல! திருமணத்தை மறுத்த காதலன்! கேரள டாக்டர் தற்கொலை! பகீர் பின்னணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மருத்துவம் படித்து வந்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று இருக்கும் போதிலும், வரதட்சணை கேட்பதும் அது சார்ந்த மரணங்களும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது கேரளாவின் திருவனந்தபுரத்தில் 26 வயதான மருத்துவர் ஒருவர் தற்கொலையால் உயிரிழந்தார்.
கேரளா பெண்: அந்த பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கேட்ட வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று காதலன் திருமணத்தை நிறுத்திய நிலையில், அந்த பெண் தற்கொலையால் உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வரதட்சணை கேட்டு தொல்லை செய்த அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைதும் செய்துள்ளனர்.
வரதட்சணை: டாக்டர் ஷஹானா தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். அவரது தந்தை வளைகுடாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஷஹானா டாக்டர் ஈஏ ருவைஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இருப்பினும், திருமணத்திற்கு டாக்டர் ருவைஸின் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 தங்கச் சவரன், 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் கேட்டதாக டாக்டர் ஷஹானாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.. இருப்பினும், இவ்வளவு தர முடியாது என்று டாக்டர் ஷஹானாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த ரூவைஸின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
பணம் தான் தேவை: இதனால் மனமுடைந்த அந்த இளம் மருத்துவர், தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது அபார்ட்மெண்டில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வரதட்சணை குறித்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
மாநில சிறுபான்மை ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் பி.சதிதேவி, டாக்டர் ஷஹானாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்தார். வரதட்சணைக் காரணமாகக் காதலித்து வந்த இளைஞரே பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததும் இதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications