சிபிஐ ரெய்டு: மோடியை கோழை, சைக்கோ என சகட்டு மேனிக்கு கரித்து கொட்டிய கெஜ்ரிவால்
டெல்லி: தன் அலுவலகத்தில் நடந்த சிபிஐ ரெய்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட கோழைத்தன நடவடிக்கை என்று கோபம் வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ என்றும் பிரதமர் குறித்து கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
கெஜ்ரிவால் ஆபீசில் சிபிஐ ரெய்டு நடத்திய தகவல் வெளியான சில நிமிடங்களில், தனது டிவிட் ஒன்றில், சிபிஐ ரெய்டு நடந்திருப்பதை அவர் உறுதி செய்திருந்தார்.

மற்றொரு டிவிட்டில், மோடியை கடுமையாக சாடியிருந்தார் கெஜ்ரிவால். அவர் கூறுகையில், "அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த கோழைத்தன நடவடிக்கையை மோடி தூண்டிவிட்டுள்ளார்" இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
அதையடுத்து கெஜ்ரிவால் மேலும் சில டிவிட்டுகளை வெளியிட்டார். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:
மோடி ஒரு கோழை, ஒரு சைக்கோ. சிபிஐ எனது அலுவலகத்தை சோதிட்டு, கோப்புகளை பார்வையிட்டது, ஆனால் இல்லை என பொய் சொல்கிறது. மோடி எந்த கோப்பு வேண்டும் என்று கேட்கட்டுமே?
When Modi cudn't handle me politically, he resorts to this cowardice
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2015 ஊழல் குற்றச்சாட்டியில் சிக்கிய எனது அமைச்சரையும், மூத்த அதிகாரியையும் டிஸ்மிஸ் செய்ததோடு, சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்த ஒரே முதல்வர் நான்தான்.
ராஜேந்தருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால், அதை சிபிஐ என்னிடம் கொடுத்திருக்கலாம். நான் நடவடிக்கை எடுத்திருப்பேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications