மதம் பார்த்து சுட்டதாக சொன்னார்களே.. காஷ்மீரில் ஒரு முஸ்லிம் நபரும் பலி! யார் அவர்? பின்னணி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்துவா? என்று மதத்தை கேட்டு கேட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொன்றதாக கூறப்படும் நிலையில் ஒரு இஸ்லாமியரும் கொல்லப்பட்டுள்ளார். அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒவ்வொருவரின் பெயர்களை கேட்டும் இந்துவா? என்பதை உறுதி செய்து துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கணவரை இழந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். மேலும் சிலரது மதத்தை உறுதி செய்வதற்காக பேண்ட் ஜிப்பை கழற்றும்படி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மதம் பார்த்து சுடப்பட்டதாக கூறப்பட்டாலும், ஒரு முஸ்லிமும் கொல்லப்பட்டுள்ளார். .அதிர்ஷ்டவசமாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படவில்லை. கணவரை கண்முன்னே பறிகொடுத்த பெண்கள் தங்களையும் சுட்டு வீழ்த்தும்படி கூறியும் பயங்கரவாதிகள் ஏற்காமல் விட்டு சென்றனர். மாறாக ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 25 பேர் இந்துக்களாக உள்ளனர். இந்நிலையில் தான், மதம் பார்த்து சுடப்பட்டதாக கூறப்பட்டாலும் கூட ஒரு இஸ்லாமியரும் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் சையத் உசேன் ஷா. இவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்த் நாக் பகுதியை சேர்ந்தவர். இதுதொடர்பாக அவரது தாய் கண்கலங்கி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛எனது குடும்பத்துக்கு மகன் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருந்தார். இப்போது அவனும் இறந்துவிட்டான்'' எனக்கூறி கண்கலங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications