"ஜெகஜால கில்லாடி".. வந்ததும் சரியில்ல, வாய்ச்சதும் சரியில்ல.. கிறுகிறுக்க வைத்த "இரட்டை வால் குருவி"
ஜெய்ப்பூர்: 2 பெண்களும் சேர்ந்து டார்ச்சர் தந்ததில், ஒரு நபர் தற்கொலை செய்து உயிரையே விட்டுவிட்டார்.. இப்படி ஒரு முடிவெடுக்க காரணம், தன்னுடைய 2 பொண்டாட்டிகளும்தான் என்று மரண வாக்குமூலமே தந்துவிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா... 45 வயதாகிறது.. இவர் ஒரு செய்தியாளர்.. அங்குள்ள பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது மனைவி பெயர் கவுசல்யா.. கல்யாணம் ஆகி 21 வருடங்கள் ஆகிறது.. ஆனால், குடும்பத்தில் எந்நேரமும் சண்டை, சச்சரவுக்கு ஆளானார்.. இதனால், கல்யாண வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தார் மிஸ்ரா..
அறிமுகம்: இந்நிலையில், பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் அறிமுகமானது.. அந்த பெண்ணின் பேச்சிலும், அழகிலும் மயங்கினார்.. இப்படி ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்தால் நல்லா இருக்குமே என்று ஆசைப்பட்டார்.. அவருடன் நெருங்கியும் பழகினார். ஒருகட்டத்தில், திருமணத்தை மீறிய உறவிலும் இருந்துள்ளார்... கடைசியில் இந்த விஷயம், வீட்டுக்கு தெரிந்துவிட்டது. கவுசல்யா வழக்கம்போல் கொந்தளித்தார்..
எனினும், பெரேராவுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்தார் மிஸ்ரா.. ஏற்கனவே தகராறும், பிரச்சனையும் குடும்பத்தில் அதிகரித்திருந்த நிலையில், கவுசல்யாவின் ஆவேசம் மேலும் பெருகியது..
மன உளைச்சல்: இதனால், பாரத் மிஸ்ரா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கு நடுவில், மிஸ்ராவிடம், பெரேராவும் தகராறு செய்ய ஆரம்பித்தார்.. 2 பெண்களும் தினமும், ஆளுக்கு ஒரு பக்கம், சண்டை போடவும், உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளானார் மிஸ்ரா.. நேற்று மதியம் பெரேராவுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோதும், அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது..
சிறிது நேரத்தில், பெரேரா வீட்டிற்கே கிளம்பி சென்றார் மிஸ்ரா.. அங்கு உள்ளே நுழைந்ததுமே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதில் ரத்த வெள்ளத்திலேயே மிஸ்ரா பிணமானார்.
பேஸ்புக் பதிவு: இந்த தற்கொலைக்கு முன்பு, பேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மிஸ்ரா.. அதில், "என் மரணத்திற்கு காரணம், மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான்.. இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டது.
என் மனைவி கெளசல்யா எல்லா இடங்களில் என்னை அசிங்கப்படுத்தினார்.. இழிவாக நடத்தினர்.. அவரிடமிருந்து எனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்கவில்லை... அதனால், அவரை விவாகரத்து செய்ய பலமுறை நினைத்தேன்... ஆனால், என்னுடைய வயதான அம்மா, அப்பாவுக்காகவும், அவர்களின் மீதான மரியாதைக்காகவும், கவுசல்யா செய்யும் டார்ச்சரை எல்லாம் சகித்துக்கொண்டேன். அதற்கு பிறகு, அவரை பிரிந்து என்னுடைய வழியில் வாழ ஆரம்பித்தேன்
பெரேரா அறிமுகம்: அப்போதுதான், பின்சி பெரேராவை சந்தித்தேன்.. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது... ஆனால், பெரேரா வீட்டிற்கு வந்ததுமே, கெளசல்யா இன்னும் கேவலமாக பேசினார்.. அதனால், நானும் பெரேராவும் நீண்டகாலமாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
ஒருகட்டத்தில், பெரேராவும், என் மனைவி கௌசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க, எங்களுக்குள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. கௌசல்யா என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்.. பெரேராவும் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்.. பெரேரா.. நீயும் என் வாழ்வை பாழாக்கி விட்டாய்.. உங்க 2 பேராலும்தான் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்.. என்னுடைய வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பரிதாப முடிவு: போஸ்ட் மார்ட்டம் முடிந்ததையடுத்து, மிஸ்ராவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு செய்தியாளர், எந்த அளவுக்கு மனம் நொந்துபோயிருந்தால், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இறந்திருப்பார்? 2 பெண்களும் அப்படியென்ன டார்ச்சர்களை தந்திருப்பார்கள்??
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications