ரயில் பெட்டிகளில் மஞ்சள் & வெள்ளை கோடுகள்.. பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா! இது தெரியாம போச்சே
டெல்லி: நீங்கள் ரயில்களில் செல்லும் போது அதன் பெட்டிகளில் மஞ்சள், சிவப்பு என பல்வேறு நிறங்களில் கோடுகள் வரையப்பட்டு இருப்பதைக் கவனித்திருக்கலாம். ஆனால், எதற்காக இந்த கோடுகளைப் போட்டுள்ளனர் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. இந்த கலர் கலர் கோடுகளுக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் பொது போக்குவரத்தில் ரயில்கள் தான் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். இருப்பினும், ரயில்களில் இருக்கும் பல நுட்பமான விஷயங்கள் குறித்து நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. அதில் ஒன்று தான் ரயில் பெட்டிகளில் இருக்கும் கோடுகள்.

கோடுகள்
ரயில் பெட்டிகளில் ஓரத்தில் மேலே இதுபோல கோடுகளை வரைந்திருப்பார்கள். ஆனால், இவை வெறும் அழகு அல்லது டிசைனுக்கு மட்டும் இல்லை.. இவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அது உங்களுக்கே பிரமிப்பைத் தருவதாக இருக்கும்.
முதலில் வெள்ளைக் கோடுகள்.. நீல நிற ரயில் பெட்டிகளுக்கு மேலே ஓரத்தில் இது போல வெள்ளை கோடுகளை பெயிண்டு செய்திருப்பார்கள். அது ஜெனரல் பெட்டி என்பதைச் சுட்டிக்காட்டவே இதுபோல வெள்ளை கோடுகளை கொண்டிருக்கும். நாம் பெரும்பாலும் ரயில்களில் இந்த கலரை தான் பார்ப்போம்.
கலர் கலர் கோடுகள்
அடுத்து மஞ்சள் கோடுகள்.. மஞ்சள் கோடுகளை.. இதைப் பார்த்ததே இல்லையே என நீங்கள் யோசிக்கலாம்.. உண்மை தான் இந்த பெட்டிகளை நீங்கள் அதிகம் பார்க்க முடியாது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த பெட்டிகள் பெரும்பாலும் ரயிலின் தொடக்கத்தில் மட்டுமே இருக்கும். ஒரு ரயிலுக்கே ஒரு பெட்டி தான் இருக்கும். இதன் காரணமாகவே நீங்கள் பெரும்பாலும் இதைக் கவனித்திருக்க முடியாது.
உள்ளூர் ரயில்கள்
அடுத்து சாம்பல் நிறக் கோடுகள்(Grey Stripes).. பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டி என்பதைக் குறிக்கவே இதுபோல சாம்பல் நிற கோடுகள் இருக்கும். அதேபோல சில பெட்டிகளில் சிவப்பு நிற கோடுகளும் இருக்கும். முதல் வகுப்பு பெட்டிகள் என்பதைக் காட்டவே இந்த சிவப்பு நிற கோடுகள் இருக்கும். பெரும்பாலும் உள்ளூர் ரயில்களில் நாம் இந்த இரு கோடுகள் இருக்கும் பெட்டிகளைப் பார்க்கலாம். இதுபோல கலர்கள் இருப்பதால் பயணிகள் எளிதாக தங்களுக்குத் தேவையான பெட்டியைக் கண்டறிந்து ஏறிக்கொள்ளலாம்.
ரயில் பெட்டிகள்
கோடுகள் மட்டுமின்றி ரயில் பெட்டிகளின் கலர்களுக்கும் கூட தனித்தனி காரணங்கள் இருக்கவே செய்கிறது. அது குறித்தும் நாம் பார்க்கலாம். முதலில் நீல கலர் பெட்டிகள். நாம் பெரும்பாலும் ரயில்களில் இந்த கலர்களில் தான் இருக்கும். இந்த ரயில்கள் அதிகபட்சம் 70 முதல் 140 கிமீ/மணி வேகத்தில் செல்லும் என்பதை இது காட்டுகிறது. இவை பொதுவாக மெயில் எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில் இருக்கும்.
அடுத்துச் சிவப்பு பெட்டிகள்.. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற குளிர்சாதன ரயில்களில் உள்ள பெட்டிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அடுத்து பச்சை பெட்டிகள்.. இவை கரிப் ரத் ரயில்களுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளை இணைக்கும் ரயில்களையே கரிப் ரத் என குறிப்பிடுவார்கள். அவை பொதுவாகப் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும், பழங்கால மீட்டர்-கேஜ் ரயில்களின் பெட்டிகள் பிரவுன் கலரில் இருக்கும். புதிய வந்தே பாரத் ரயில்கள் வெள்ளை நிறத்தில் பெட்டிகளைக் கொண்டிருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications