அப்படியே ஒதுக்கப்பட்ட சஞ்சு சாம்சன்! இன்றைக்கு நடந்ததை கவனிச்சீங்களா? ஹர்திக் பாண்டியா சுதாரிக்கணும்
கேப் டவுன்: நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணியில் இருக்கும் முக்கியமான பிரச்சனை ஒன்று வெட்டவெளிச்சம் ஆகி உள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது மேட்சில் இந்தியா சூர்ய குமாரின் அதிரடி சதம் காரணமாக எளிதாக வென்றது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் தற்போது தடை பெற்றுள்ளது.

டாஸ்
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. ஆலன் 3 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் கான்வாய் 59 ரன்கள் எடுத்தார். சாப்மேன் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இன்னொரு பக்கம் பிலிப்ஸ் 54 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 146-4 ரன்கள் எடுத்து இருந்த நியூசிலாந்து 149 எடுக்கும் முன் 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய பவுலர்கள் டெத் ஓவர்களில் கம்பேக் கொடுத்தனர்.

கம்பேக்
முக்கியமாக அர்ஷ்தீப் சிங், சிராஜ் இரண்டு பேருமே சிறப்பாக பவுலிங் செய்தனர். இரண்டு பேருமே தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். சிராஜ் வெறும் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின் இறங்கிய இந்திய அணி பவர் பிளேவிற்குள் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று வேகமாக ஆடியது. மழை குறுக்கிட வாய்ப்பு இருந்ததால் டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி வேகமாக ஆடியது.

அவுட்
இதனால் ரிஷாப் பண்ட் வெறும் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் இஷான் கிஷன் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 3 வருடமாக பார்மிலேயே இல்லை. ஐபிஎல் போட்டிகளிலும் இவர் சரியாக ஆடவில்லை, உள்ளூர் போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. சர்வதேச போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.

ஷ்ரேயாஸ் ஐயர்
ஆனால் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியா டி 20 தொடரில் நன்றாக ஆடியும் கூட அவர் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டு வருகிறார். அணியில் இன்றும் அவரை எடுக்கவில்லை. இதன் காரணமாக பெவிலியனில் அமைதியாக அமர்ந்து இருந்தார். கேப்டன் கோலி, ரோஹித் சர்மா இருவருமே தங்கள் கேப்டன்சியில் பெரிதாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்ததே இல்லை. அவ்வப்போது இறங்குவார்கள். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர், பண்டிற்கு கொடுப்பது போல தொடர் வாய்ப்புகள் கொடுத்ததே இல்லை.

தொடர் வாய்ப்பு
இந்த இரண்டு வீரர்களும் மோசமாக சொதப்பினாலும் கூட அவர்களுக்கு அணியில் தொடர் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சஞ்சு ஒன்று இரண்டு போட்டியில் சொதப்பினால் அவ்வளவுதான். கதை ஓவர் என்ற நிலையே இருக்கிறது. இவர் இல்லாமல் மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேன் குறைக்கிறார். சஞ்சு சாம்சன் பெரிய பவுண்டரி இருக்கும் மைதானங்களில் நன்றாக ஆட கூடியவர். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் அப்படி அல்ல. ஆனாலும் சஞ்சுவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்படுவது இல்லை.

சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் அடுத்த டி 20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா வர வாய்ப்பு உள்ளது. தற்போது பார்ட் டைம் கேப்டனாக இருக்கும் அவர் முழுநேர கேப்டன் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மிடில் ஆர்டர் சொதப்பலை ஹர்திக் பாண்டியா சரி செய்ய வேண்டும். எதிர்காலத்திற்கான அணியை உருவாக்க வேண்டும் என்றால் திறமையான வீரர்களை தொடர்ந்து எடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். முக்கியமாக சஞ்சு சாம்சன் போன்ற முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications