கள்ள உறவு மோகம்.. சிதறி கிடந்த ஆணுறைகள்.. டீ கப்பில் லிப்ஸ்டிக்.. 'பிளான்' போட்டு கொன்ற மனைவி!
டீயில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொலை செய்துள்ளார் மனைவி
Recommended Video
தானே: கணவனுக்கு டீ-யில் தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தையும் நெறித்து கொலை செய்துள்ளார் மனைவி.. காரணம் கண்ணை மறைத்த கள்ளக்காதல்!
தானே மிராரோடு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத் பதான்கர். இவருக்கு வயது 43. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி 36 வயதான தீப்தி.
இந்நிலையில், பிரமோத், கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததால், நிறைய சந்தேகங்களும் எழுந்தன. இதனால் நவ்கர் போலீசார் விசாரணையை துரிதமாக்கினார்கள். முதல் வேலையாக, கட்டிட வளாகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சமயத்தில்தான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது.

கள்ளக்காதல்
அதில், பிரமோத் ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகமாக்கியது. அதனால் முதல் விசாரணையே அவரது மனைவி தீப்திதான். ஆரம்பத்தில் மழுப்பலாக பேசிய தீப்தி, பிறகுதான் உண்மையை கக்கினார். கள்ளக்காதல் குட்டும் வெளிப்பட்டது. தீப்தி போலீசாரிடம் சொன்னதாவது:

தகராறு
"நான் கோரேகாவில் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்தேன். போன 2015-ம் வருஷத்தில் இருந்து புனேயை சேர்ந்த உத்தவ் பஜான்கர் என்பவருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பிரமோத்துக்கு தெரியவரவும், எங்களுக்குள் தகராறு அடிக்கடி வந்தது. இது எனக்கு எரிச்சலாக இருந்தது.

கொன்றோம்
அதனால்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரமோத்தை தீர்த்து கட்ட திட்டம் போட்டோம். இதுக்காகவே என் மகளை, என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன். பிரமோத்துக்கு டீ போட்டு அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அவரும் மயக்கமா விழுந்துட்டாரு. அதுக்கப்புறம் நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொன்றோம்" என்றார்.

ஆணுறைகள்
இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால், தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரமோத் சாப்பிட்ட டீ கப்பில் "லிப்ஸ்டிக்" மூலம் உதடு வரைந்திருக்கிறார். இது போக, ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து விட்டார். அதாவது பிரமோத்துக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதுபோல செட்டப் செய்தார்.

கைது
பிறகு அவரே போலீசுக்கும் போன் செய்து தகவலை சொல்லிவிட்டு, ஒன்னுமே நடக்காதது போல இருந்து கொண்டார். இதெல்லாம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெட்ட வெளியே வந்தது. இப்போது கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications