ஜார்க்கண்ட்டில் 2 கிங் மேக்கர்கள்.. இருவருக்கும் வலை வீசும் பாஜக.. ஆட்சியை தக்க வைக்குமா?
Recommended Video
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு அதிக இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், 2 கிங் மேக்கர்கள் அந்த மாநிலத்தில் உருவாகியுள்ளனர். இருவருக்கும் பாஜக தற்போது வலை வீசியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக வெளியான எக்சிட் போல் கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே இருந்து வந்தது.
ஆனால் தற்போது திடீரென பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது சூழ்நிலை. தற்போதைய நிலவரப்படி பாஜக (இத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது) 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜேவிஎம்
அதேபோல பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி (பிரஜாதந்திரிக்) கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்து இந்த தேர்தலில் பாஜகவால் கழற்றி விடப்பட்ட அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவர்களுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இரண்டு கிங் மேக்கர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் ஏஜேஎஸ்யூ கட்சியும், ஜேவிஎம் கட்சியும் கிங் மேக்கர்களாக உருவெடுத்திருக்கின்றனர். ஏஜேஎஸ்யூ கட்சியை பாஜக உதறியதால்தான் இப்போது அது திணறியுள்ளது. அதேசமயம், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வேலைகளில் இப்போதே இறங்கி விட்டது.

மராண்டி ரெடிதான்
இதற்காக பாபுலால் மராண்டி மற்றும் ஏஜேஎஸ்யூ தலைவர் சுரேஷ் மஹதோ ஆகியோரை அது தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாஜகவுடன் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க தாங்கள் தயார் என்று பாபுலால் மராண்டி கூறியுள்ளார். எனவே அக்கட்சியுடன் இணைந்து பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முயற்சிக்கலாம். மராண்டியும் சில பல பேரங்களுக்குப் பின்னர் ஆதரவு தர முன் வருவார் என்றே தெரிகிறது.

இழுக்கும் முயற்சிகள்
அதேபோல கழற்றி விட்ட மாணவர் யூனியன் கட்சியையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் பாஜக தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே இந்த இரு கட்சிகளையும் தன்பக்கம் இழுத்து விட்டால் பாஜகவுக்கு எளிதாக பெரும்பான்மை பலம் கிடைத்து விடும். எனவே இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.

சித்து விளையாட்டுகள்
அதேசமயம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் டஃப் பைட் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியும் இரு கட்சிகளையும் இழுக்க முயற்சிக்கும். அவர்களுக்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எனவே ஜேவிஎம் மற்றும் ஏஜேஎஸ்யூ ஆகியோருக்கான கிராக்கி தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஏஜேஎஸ்யூவுக்கான கிராக்கிதான் மிக மிக அதிகமாக உள்ளது. காரணம் ஜேவிஎம்மை விட இக்கட்சிக்குத்தான் கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications