மத்தியில் 3வது அணி? அகிலேசுக்கு பின் நவீன் பட்நாயக்கை சந்தித்த மம்தா.. நடந்தது என்ன? திரும்பும் கை
புவனேஸ்வர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்புகிறார். சமீபத்தில் அகிலேஷ் யாதவை சந்தித்து அவர் பேசிய நிலையில் தற்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். இதனால் மத்தியில் 3வது அணி உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி-நவீன் பட்நாயக் சந்திப்பில் என்ன நடந்தது? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜெயித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளனர்.
ஆனால் பாஜகவை வீழ்த்தி மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வியூகம் வகுத்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக பல மாநிலங்களில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் சமீபத்தில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மியிடம் அதிகாரத்தை இழந்தது. இதனால் பாஜக தனித்து எதிர்ப்பது என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாக உள்ளது.

3வது அணிக்கு திட்டம்
இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லாத புதிய கூட்டணியை 3வது அணியாக உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளன. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது.

நவீன் பட்நாயக்குடன் மம்தா சந்திப்பு
மேலும் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சி தலவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் ஒடிசா மாநிலத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வரும், நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு நவீன் பட்நாயக் கூறுகையில், ‛‛இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் அரசியல் பேசவில்லை. கூட்டாட்சி முறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தோம்'' என்றார். மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛நவீன் பட்நாயக்குடன் எப்போதும் நல்லுறவு உள்ளது. கூட்டாட்சி முறை பற்றிய அவரது கருத்தை ஆதரிக்கிறேன். 3வது அணி பற்றி பேசவில்லை'' என்றார்.

3வது அணி உருவாக்க முன்முயற்சி
இருப்பினும் கூட இந்த சந்திப்பு என்பது 3வது அணியை உருவாக்குவதற்கான முன்முயற்சி என கூறப்படுகிறது. அதாவது இருவரும் கூட்டாச்சி முறையை பற்றி பேசியதாக கூறியுள்ளனர். தற்போதைய சூழலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. இதற்கு பதிலாக அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாச்சியை அமைப்பது தொடர்பா நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி ஆகியோர் விவாதித்துள்ளனர். இதன்மூலம் மம்தா பானர்ஜி-நவீன் பட்நாயக் சந்திப்பு என்பது பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் 3வது அணி அமையுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதாவது வரும் காலங்களில் இருதலைவர்களும் சந்தித்து இதுபற்றி பேசி இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

அகிலேசுக்கு பின் நவீன் பட்நாயக்
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் வைத்து உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜியை சந்தித்தார். இருவரும் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைப்பது பற்றி விவாதித்ததோடு, பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் சமமான தூரத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி தற்போது நவீன் பட்நாயக்கை சந்தித்த பேசியுள்ளார். இதனால் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications