96% பேர் டெபாசிட் காலி- கேஜ்ரிவாலின் சிறைவாசம் ஆம் ஆத்மியின் டெபாசிட்டை காப்பாற்றுமா?
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் சிறைவாசம் ஆம் ஆத்மி கட்சிக்கு வருங்காலத்தில் டெபாசிட்டை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் 96 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருந்தனர்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 434 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. 96 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். அக்கட்சியிலிருந்து கேப்டன் கோபிநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் நிதின் கட்கரியை ஊழல்வாதி என்று குறிப்பிட்டு பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தொடர்ந்து மான நஷ்ட வழக்கில் ஜாமீன் அளிக்க ரூ.10 ஆயிரத்தை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதை செலுத்த மறுத்ததால் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ.10 ஆயிரம் என்பது கேஜ்ரிவால் கட்சிக்கு ஒரு பெரிய தொகை கிடையாது. ஆனால் சிறை வாசத்தை வலிய பெற்றுக்கொண்டார் கேஜ்ரிவால். இதன் மூலம், சோர்ந்து கிடந்த ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் 'தியாகி' என்ற பட்டப்பெயரை பெற்று கட்சியினரை உசுப்பிவிடலாம் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.
கேஜ்ரிவால் இன்று சிறைவாசத்தை முடித்துவிட்டு வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளார். கேஜ்ரிவாலின் சிறைவாசம் வரும் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு டெபாசிட்டை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications