For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு பண முதலைகள் மீது மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்! சமூக தளங்களில் புகழாரம் #BlackMoney

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள், செல்லாது என்ற அறிவிப்பு, கறுப்பு பண முதலைகள் மீது மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

மோடியின் அறிவிப்பால், செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியோடு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதமாக மாறுகின்றன. லஞ்சம், சுரண்டல், ஊழல் மூலம் சேர்த்து, பதுக்கி வைத்த பணத்தை பண முதலைகள் இனி வெளியே கொண்டுவர முடியாது.

With Rs 500 and Rs 1,000 notes Modi did Surgical Strike on #BlackMoney

வங்கி பரிவர்த்தனை மூலமே பணம் பரிமாறப்பட வேண்டும் எனும் வகையில் ஏடிஎமில் நாள் ஒன்றுக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என்று மோடி அறிவித்துள்ளதால், அப்படியும் கைகள் கட்டப்பட்டுவிட்டன. வங்கி பரிவர்த்தனை மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றால் கருப்பு பணத்தை கண்டுபிடித்துவிடலாம்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தவர்களை கண்டுபிடித்துவிடலாம். தீவிரவாதிகள், நிழலுலக தாதாக்கள், சட்ட விரோத மதமாற்றம் போன்றவற்றுக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் இனி பயனற்று போய்விடும். பாகிஸ்தான் நாட்டிலிருந்து சுமார்
ரூ.12,00,000 கோடி மதிப்புள்ள ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாயிலான கள்ள நோட்டுக்கள் இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தது.

மோடியின் ஒரு உத்தரவு மூலம், அத்தனை கள்ள நோட்டுகளும் இப்போது விழி பிதுங்கிவிட்டன. ஊழல்வாதிகள் பணத்தை மாற்ற வழி தெரியாமல் விழிபிதுங்குகிறார்கள். எனவேதான் மோடியின் இந்த அறிவிப்பை சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கட்சி பேதமின்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் வர்ணிக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளின் லாபி இந்த அறிவிப்புக்கு எதிராக பொங்கியெழ வாய்ப்புள்ளது.

ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை ரகசியமாக செயல்படுத்திய மோடி அரசு, ஊழல் லாபியை உடைக்கவும் வழி வைத்திருக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

English summary
The menace that is Pakistan had ensured that nearly Rs 12,00,000 crore worth of fake currency was in circulation in the Indian market. A dossier on the fake currency prepared by the Indian Intelligence Bureau in the possession of OneIndia shows that Pakistan had over the years pumped in fake currency in large numbers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X