ஆசாராம் பாபு வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை... 2 பேருக்கு வலைவீச்சு!
லக்னோ: சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் முக்கிய சாட்சியாக திகழ்ந்த அகில் குப்தா என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர்.
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆசாராம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே, அவர் மீது வேறொரு பாலியல் பலாத்கார வழக்கும் தொடரப்பட்டது.

சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்டவர் அகில் குப்தா (35). இவர் பாபுவின் மடத்தில் சமையல் பணியாளராக பணி புரிந்தவர்.
இந்நிலையில், அகில் மர்மநபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப் பட்டார். அகில் கொலை தொடர்பாக உத்திரப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசாராம் வழக்கின் முக்கிய சாட்சி கொல்லப்பட்ட வழக்கில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் ஆசாராம் வழக்கில் அகில் சாட்சியாக இருந்ததால் நடைபெற்றுள்ளதா இல்லை வேறு ஏதும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications