ஆட்டுக்கால் சூப்பில் விஷம்.. 6 பேர் கொடூர கொலை.. 14 வருஷத்துக்கு பிறகு சிக்கிய ஜோலி!
6 பேரை கொன்ற பெண் 14 வருடங்களுக்கு பிறகு கைதானார்
Recommended Video
கோழிக்கோடு: ஆட்டுக்கால் சூப்பில் விஷம் கலந்து ஆறு பேரை கொன்ற ஜோலி என்ற பெண்ணை போலீசார் கிட்டத்தட்ட 14 வருஷங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
2002- முதல் நடந்த சம்பவம் இது: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள பகுதி கூடத்தொரை. இங்கு வசித்துவந்தவர் ஜான் தாமஸ். இவர் ஓய்வு பெற்ற ஒரு கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாவும், ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை.
மகன் ரோய் தாமஸ் மற்றும், அன்னம்மாளுடன் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் என இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

மர்ம மரணம்
இந்நிலையில் 2002 முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்தது. அந்த சமயத்தில், இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள் இது சாதாரணமான மரணம் என்று சொல்லிவிட்டார்கள். இதையடுத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.

போஸ்ட் மார்ட்டம்
ஆனாலும் 6 பேர் இறந்தது குடும்ப உறுப்பினர்களை ரொம்பவும் பாதித்தது. ஏதோ மர்மம் இருக்கிறது என்று போலீசாரிடம் சொல்லியும் அவர்களும் அதை காதில் வாங்கவில்லை போல தெரிகிறது. ஆனால் தொடர்ந்து கோழிக்கோடு போலீசாரிடம் கோரிக்கை விடுத்து கொண்டே இருக்கவும், வேறு வழியில்லாமல், 6 பேரின் உடல்களையும் திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

சொத்துபிரச்சனை
அதன்படி 14 வருஷங்களுக்கு பிறகு கல்லறைக்கு போனார்கள். 6 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து, கிடைத்த எலும்பு கூடு பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் 6 பேரின் உடல்களிலும் விஷம் இருந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில், இது சொத்துக்காக நடந்த கொலை என்பது தெரியவந்தது. இந்த குடும்பத்துக்கு நிறைய சொத்து இருந்திருக்கிறது.

கைது
இதை அபகரிக்க சொந்தக்கார பெண் ஜோலி என்பவர்தான் இவர்களை கொன்றுள்ளார். ஜோலி என்பவர் அன்னம்மாளின் மருமகள் என்று சொல்லப்படுகிறது. இவர், எல்லாருக்குமே ஆட்டுக்கால் சூப் ரெடி செய்து, அதில் சயனைடு கலந்து தந்துள்ளனர். இதை குடித்த அவர்களுக்கு வாந்தி, மயக்கம் வந்தே இறந்துள்ளனர். ஆனால் அதன்பிறகு ஜோலியை காணவில்லை. அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், இப்போதுதான் சிக்கி உள்ளார். அன்று நடந்த கொலைகள் குறித்து இப்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications