"துண்டா" போயிடுச்சு.. அத்துமீறிய இளைஞர்.. ஸ்டேஷனில் ஆக்ரோஷமாக நுழைந்த "சிங்கப்பெண்".. மலைத்த போலீஸ்
பாலியல் பலாத்காரம் செய்த நபரின் விரலை கடித்து துப்பிய பெண்ணை போலீசார் பாராட்டி உள்ளனர்
கான்பூர்: கொலை செய்துவிட்டு, அந்த தலையையும் துண்டித்து எடுத்து கொண்டு, எத்தனையோ பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து சரணடைந்து இருக்கிறார்கள்.. ஆனால், ஒருவர் "விரலுடன்" ஸ்டேஷனுக்குள் வந்துள்ளார்.. என்ன காரணம்?
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி என்ற பகுதியில் உள்ளது மயோஹார் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நீட்டா தேவி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பக்கத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க சென்றிருக்கிறார்.
தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நபர் நீட்டாதேவி கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் கையில் பர்ஸ் இருப்பதை பார்த்தார்..

துண்டான விரல்
நீண்ட நேரமாக நீட்டா தேவியையே கவனித்து கொண்டிருந்தவர், பிறகு அவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்.. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததுமே, நீட்டா தேவி கழுத்தில் அணிந்திருந்த நகையையும், அவரது கையில் இருந்த பணத்தையும் அந்த நபர் பறிக்க முயன்றுள்ளார்.. பிறகு திடீரென நகை, பணத்தை விட்டுவிட்டு, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த நீட்டாதேவி, அலறி கூச்சல் போட்டார்.. உடனே அந்த நபர், நீட்டாதேவியின் வாயை கையால் மூடியுள்ளார்.. அப்போது நீட்டா தேவி, அந்த நபரின் விரலை அழுத்தமாக கடித்துவிட்டார்..

வலியில் அலறல்
இதனால், அந்த நபர் வலி தாங்க முடியாமல், நீட்டா தேவியை தள்ளிவிட முயன்றார்.. ஆனால், நீட்டாதேவியோ, அந்த நபரை விடவில்லை.. அவரது கையை இறுக்கி பிடித்து, விரலை கடித்து 2 துண்டாக்கிவிட்டார்.. இப்போது அந்த நபர் வலியால் கத்த ஆரம்பித்துள்ளார்.. உடனே அந்த பகுதி மக்கள் திரண்டு ஓடிவந்தனர்.. ஆனால், அவர்களை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இதையடுத்து, அந்த துண்டித்து விழுந்த விரலை எடுத்துக் கொண்டு, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார் நீட்டாதேவி.. நடந்த சம்பவம் குறித்து விரிவாக சொல்லி, புகாரையும் தந்தார்.. அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..

புதருக்குள்
அத்துடன் நீட்டாதேவியின் துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டினர்.. நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படித்தான் ஒரு சம்பவம் இதே உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில், கடந்த 4ம் தேதி நடந்துள்ளது.. அந்த இளம்பெண் வயலுக்கு வேலைக்கு சென்றிருந்தார்.. அப்போது ஒரு இளைஞர், அந்த பெண்ணின் பின்னாடியே ஃபாலோ செய்து, ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து, கதறி உள்ளார்..

ட்ரீட்மென்ட்
அந்த பெண்ணை சரமாரியாக அடித்து தாக்கி, அவரது ஆடைகளையும் அவிழ்த்து, பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார். உடனே, அந்த பெண் சுதாரித்துக்கொண்டார்.. முதலில் உனக்கு நான் முத்தம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.. இதைக்கேட்டதும், அந்த இளைஞரும் சரி என்று சொல்லவும், இவரும் முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது திடீரென இளைஞரின் உதட்டை சிதைத்துவிடவும், அந்த இளைஞர் வலியால் கதறி துடித்திருக்கிறார்.. வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து, இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர். அந்த இளைஞனுக்கு "ட்ரீட்மென்ட்" நடந்து கொண்டிருக்கிறதாம்..!!












Click it and Unblock the Notifications