உ.பி.: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை எரித்துக் கொன்று நகை, பணம் கொள்ளை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வயதான பெண் ஒருவர் கொள்ளையர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர சிங். அவரின் மனைவி சரோஜ். நேற்று இரவு நரேந்திர சிங் வெளியே சென்றிருந்தார். சரோஜ் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்கள் சரோஜை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் முன்பு சரோஜை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். வெளியே சென்ற நரேந்திர சிங் வீடு திரும்பியபோது தனது மனைவி எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். வயதான பெண் ஒருவர் கொள்ளையர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications