For Daily Alerts
மும்பையில் அக்கிரமம்.. ஓடும் காரில் பெண் பலாத்காரம் - 2 பேர் கைது
மும்பை: மும்பையில் ஓடும் காரில் ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். இதில் போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 35 வயதுப் பெண் போலீஸில் கொடுத்த புகாரில், நான்கு பேர் சேர்ந்து என்னை எனது எம்பிவி காரில் வைத்து வியாழக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதில் இருவரை எனக்கு அடையாளம் தெரியும். ஏற்கனவே எனக்குத் தெரிந்தவர்கள்தான் என்று கூறியிருந்தார்..
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இரண்டு பேரைக் கைது செய்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.
புகார் கூறிய பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.