2000 பயணிகள்.. 100 பணியாளர்களை பீதிக்கு உள்ளாக்கிய 45 வயது பெண்.. கொல்கத்தா விமான நிலைய பரபரப்பு!

கொல்கத்தா விமான நிலையத்தில் பெண் ஒருவர் ஏற்படுத்திய குழப்பத்தால் மக்கள் தொல்லைக்கு உள்ளாகினர்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் பெண் ஒருவர் ஏற்படுத்திய குழப்பத்தால் மக்கள் தொல்லைக்கு உள்ளாகினர்.

கொல்கத்தாவை சேர்ந்த அந்த 45 வயது பெண்ணின் விவரம் வெளியிடப்படவில்லை. இவர் தன்னுடன் 15 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். புவனேஷ்வர் செல்வதற்காக அவர் அங்கே வந்துள்ளார்.

தன்னுடன் தன்னுடைய குடும்பத்திற்காக 5 டிக்கெட் கொண்டு வந்துள்ளார். ஆனால் விமான நிலைய விதிப்படி அவருக்கும், அவருடன் வந்த சிறுமிக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதி பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

 சண்டை போட்டார்

சண்டை போட்டார்

இதையடுத்து, வீட்டில் இருந்து வந்து கொண்டு இருக்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும், என்னிடம் டிக்கெட் இருக்கிறது என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் இரண்டு பாஸ் மட்டுமே கொடுக்கப்படும் என்று விடாப்பிடியாக மறுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பணியாளர்களிடம் அந்த பெண் சண்டை போட்டுள்ளார்.

 அனுமதி கிடையாது

அனுமதி கிடையாது

இதையடுத்து போலீசார் அங்கே வந்துள்ளனர். அங்கு வந்த பின், போலீசிடம் அந்த 45 வயது பெண், தான் விருப்பம் இல்லாமல் கொல்கத்தா செல்வதாக கூறியுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் கட்டாயத்தின் காரணமாக கொல்கத்தா செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் தனி அறையில் காவலில் வைக்கப்பட்டனர்.

 உள்ளே வந்தனர்

உள்ளே வந்தனர்

அந்த சமயம் பார்த்து, அங்கு அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அங்குவந்துள்ளனர். அவர்களையும் போலீஸ் அந்த தனி அறையில் அடைத்தது. மேலும், அந்த விமானத்தில் அவர்கள் பயணிப்பதற்காக வைத்திருந்த டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 புகார் அளித்தார்

புகார் அளித்தார்

இந்த நிலையில்தான் அந்த 45 வயது பெண்ணின் பாட்டி வீல் சேரில் கழிவறைக்கு செல்லும் போது விமான நிலைய ஊழியர்கள் தாக்கிவிட்டார்கள் என்று அந்த பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தன் மீது உள்ள கோபத்தில் தன்னுடைய வயதான பாட்டி தாக்கப்பட்டார் என்றுள்ளார். ஆனால் அந்த பாட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மீண்டும்

மீண்டும்

இதையடுத்து விமான நிலைய கழிப்பறைக்கு சென்ற அந்த பெண் பாதி ஆடையுடன் வந்துள்ளார். அதே ஆடையுடன் வந்து மக்கள் முன்னிலையில் நின்று இருக்கிறார். அதே ஆடையுடன் அங்கு இருக்கும் மக்களுடன் சண்டை போட்டுள்ளார். 2000கும் அதிகமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

அதுமட்டுமில்லாமல் அது வழியாக சென்ற பயணிகளை மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். சுமார் 6 மணி நேரம் அந்த பெண்ணால், அந்த விமான நிலையம் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறது. இதையடுத்து அந்த பெண் கடைசியில் போலீசால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+