குவாரன்டைனிலும் குஜால்.. கள்ளகாதலனுடன் செம நெருக்கம்.. சிக்கிய பெண் போலீஸ்.. தேடி வந்த மனைவி!
குவாரண்டைனில் காதலனுடன் ஆட்டம் போட்டுள்ளார் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர்
நாக்பூர்: தன் கள்ளக்காதலனுடன் செம நெருக்கமாக இருந்துள்ளார் பெண் போலீஸ்.. குவாரன்டைனை கூட, ஹனிமூன் போலவே பயன்படுத்தி கொண்டுள்ளார் அந்த பெண் போலீஸ் ஏட்டு.. இந்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது!
மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் போலீசில் ஏட்டாக வேலைபார்க்கிறார் அந்த இளம்பெண்... இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
கொஞ்ச நாளைக்கு முன்பு இவர் வேலை பார்த்த ஸ்டேஷனில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.. அதனால் இந்த பெண் ஏட்டையும் முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்... இந்த முகாம் போலீஸ் டிரெயினிங் மையத்தில்தான் உள்ளது.

அதிகாரிகள்
அப்போது, தனக்கு கல்யாணமாகிவிட்டது.. என்னையும், என் கணவரையும் ஒன்றாக சேர்த்து தனிமைப்படுத்த வேண்டும் என்று பெண் ஏட்டு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.. இதை நம்பிய அதிகாரிகளும் 2 பேரையும் குவாரண்டைனில் ஒன்றாக தங்க வைத்தனர்.. ஆனால் இந்த ஜோடி 4 நாட்கள் குவாரன்டைனில் ஆட்டம் போட்டுள்ளனர்... கூத்தடித்துள்ளனர்.

நெருக்கம்
2 பேருக்கும் குவாரன்டைனில் இருக்கிறோம் என்ற ஃபீலிங் கொஞ்சமும் இல்லை.. ஏதோ கல்யாணமாகி ஹனிமூன் வந்ததுபோல் அந்த ரூமில் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. அப்போதுதான் தெரியவந்தது, பெண் ஏட்டின் கணவர் அந்த நபர் இல்லை என்பதும், அவர் கள்ளக்காதலன் என்பதும்!!

கள்ளக்காதல்
கடந்த வருடம் ஒரு அரசு விழா நடந்திருக்கிறது.. அந்த விழாவிற்கு டியூட்டிக்கு போன பெண் ஏட்டு, தன் கள்ளக்காதலனை சந்தித்தார்.. அந்த ஒரு நாளிலேயே காதல் வேகவேகமாக வளர்ந்துவிட்டது.. அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. இது தெரிந்தும் ஏட்டு பெண் நெருங்கி பழகினார்.. குவாரன்டைன் என்பது தனிமைப்படுத்தப்படுவது என்பதால், இதனையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் பெண் ஏட்டு.

தொற்று பீதி
இதற்கு நடுவில் புருஷனை 4 நாட்களாக காணோம், வீட்டுக்கு வரவில்லை என்றுகூறி அந்த கள்ளக்காதலனின் மனைவி, பல இடங்களில் விசாரிக்க ஆரம்பித்தார்.. தேட தொடங்கினார். அப்போதுதான், முகாமில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, முகாமுக்கு பதறி கொண்டு ஓடினார்.. ஆனால், தொற்று பீதியால் அவரை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

முகாம்
என்ன செய்வதென்றே தெரியாமல், அவர் பஜாஜ் நகர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. மேலும் கமிஷனரையும் சந்தித்து மனு தந்தார்.. அதன்பிறகுதான் போலீசார் இதில் இறங்கி, அந்த குவாரண்டைன் முகாமுக்குள் சென்றனர்.. கள்ளக்காதல் ஜோடி செம ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது.. உடனடியாக அந்த ஜோடியை பிரித்து, கள்ளக் காதலனை மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

வாய்ப்பு
ஒருமுறை பிரதமர் பேசும்போது, "கொரோனாவை ஆபத்தாக பார்க்காமல், ஒரு "வாய்ப்பாக" பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.. பிரதமர் சொன்னதை நம்ம மக்களில் சிலர் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல!












Click it and Unblock the Notifications