"ஏன் கர்ப்பம் ஆகலை" என கேட்டு.. பெண்ணை மாறி மாறி நாசம் செய்த மாமனார், மச்சினன்.. ராஜஸ்தான் அராஜகம்
மருமகளை பலாத்காரம் செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்
ஜெய்ப்பூர்: ஒரு பெண்ணை அவரது மாமனாரும், மச்சினரும் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் பால்தா என்ற ஒரு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் பிரதான் சிங்.. இவரது தம்பி மகேந்திரன் சிங்.. இவர்களது அப்பா பரத் சிங். இந்த 3 சிங்குகளும் சேர்ந்துதான் ஒரு பெண்ணை படாதபாடு படுத்தி வந்துள்ளனர்.

கடந்த ஒரு மாசத்தில் மட்டும் மருமகளை 4 முறை மாமனார் பலாத்காரம் செய்தாராம்.. மச்சினரும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.. சில நேரங்களில் பெண்ணை தாக்கியும் உள்ளனர்.. கணவரிடம் இதை சொல்லியும் பிரயோஜனம் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் ஜலாவர் போலீசாரிடம் நேரடியாக வந்து புகார் தந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை எஸ்பி கோபால் மீனா, "பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனாரும், கணவரின் சகோதரனும் பல தடவை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.
கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து, அந்த பெண் இன்னும் கர்ப்பமாகவில்லையாம்.. தாய்மை அடையாததை காரணம் காட்டியே 3 பேரும் சேர்ந்து இக்கொடுமையை செய்து வந்துள்ளனர்" என்றார். இதையடுத்து மாமனார், மச்சினனை கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த கணவரையும் சேர்த்து தூக்கி வந்து ஸ்டேஷனில் வைத்துவிட்டனர்.
தற்போது இந்த 3 பேரிடம் துருவி துருவி விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது... நாளுக்கு நாள் வடமாநிலங்களில் நடக்கும் கொடுமைகள், அராஜகங்களின் அளவு கூடிகொண்டே போவது பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது!












Click it and Unblock the Notifications