புனே இன்போசிஸ் வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர்
Subscribe to Oneindia Tamil
புனே: புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் செயல்படும் கேன்டீனில் பணிபுரியும் பெண் கேஷியர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் செயல்படும் கேன்டீனில் பெண் ஒருவர் கேஷியராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி அவரை கேன்டீனில் வைத்து 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த மாதம் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் தங்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக இமெயில் அனுப்பினர்.
அந்த பெண்கள் தங்களின் பெயர்களை வெளியிடாமல் [email protected] என்ற இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications