ராஜஸ்தான்: வெள்ளிக் கொலுசுக்காக பெண்ணைக் கொன்று காலை வெட்டிச் சென்ற திருடர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணின் காலில் கிடந்த வெள்ளிக் கொலுசை திருடவந்த திருடர்கள் அதை கழற்ற முடியாமல் காலையே வெட்டிச் சென்று எடுத்துச் சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் அருகே உள்ள சங்கபுரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ருக்மணி தேவி வயது 50. காட்டுப் பகுதியில் ஆடுமாடு மேய்க்கும் வேலையை செய்து வந்தார்.
இந்தப் பெண்ணை கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணைத் தேடிச் சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை நேற்று புதர் பகுதியில் கண்டுபிடித்தனர். ஆனால் கொடுமை பெண்ணின் கால்கள் வெட்டப்பட்டிருந்தன.
சடலத்தைப் உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், ருக்மணி தேவி வெள்ளிக்கொலுசு அணிந்திருப்பார் என்றும் அதற்காக ஆசைப்பட்ட திருடர்கள் ருக்மணியை கொன்று காலை வெட்டி எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார். பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications