பேசிக்கொண்டு இருக்கும் போதே தீ வைத்தார்கள்.. உ.பியில் கந்து வட்டி கொடுமையில் கொளுத்தப்பட்ட பெண்
20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
லக்னோ: 20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த பெண் அங்கு இருக்கும் எல்லோருக்கும் முன்னிலையில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
ரேஷ்மி என்று அந்த பெண் தற்போது உயிர் பிழைத்து இருக்கிறார். மிகவும் மோசமான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எவ்வளவு கடன்
ரேஷ்மி தலித் பெண். அதே பகுதியை சேர்ந்த பெரிய கந்துவட்டி குழுவிடம் இவர் கடன் வாங்கி இருக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப விழா ஒன்றிற்காக 20 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

வட்டி கொடுத்தார்
இவர் கடந்த மூன்று மாதமாக சரியாக வட்டி கொடுத்து வந்துள்ளார். இந்த மாதமும் வட்டி கேட்ட போது கொடுத்துள்ளார். ஆனால் அந்த கந்து வட்டி குழுவின் ஆட்கள் அசலை கேட்டு அந்த பெண்ணை அடித்து இருக்கிறார்கள்.

தீ வைத்தார்கள்
இந்த நிலையில் அந்த பெண்ணை தெரு வரை தரதரவென இழுத்து வந்துள்ளார்கள். அதேபோது எல்லோரும் பார்க்கும் வகையில் அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். அந்த எரியும் வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

மோசம்
தற்போது இவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 60 சதவிகிதம் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. பேசிக்கொண்டு இருக்கும் போது தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள் என்று அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications