ஊசலாடும் 41 உயிர்கள்.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் அனுப்பப்படும் லுடோ, செஸ் பலகைகள்! ஏன் முக்கியம்?
டேராடூன்: உத்தகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பணியில் ஈடுபட்ட 41 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளனர். இன்று 13வது நாளாக மீட்பு பணி வெற்றியடையாத நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் லுடோ, செஸ் போர்டுகளை உள்ளே அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தத. கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். மொத்தம் 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 150 மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.
இதையடுத்து 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கான பணி தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மீட்பு பணியை தொடங்கினர். முதற்கட்டமாக தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வந்தனர்.
மேலும் சுரங்கத்தை துளையிட்டு பைப்பை உள்ளே செலுத்தி தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. ஆனால் அங்குள்ள இடம் என்பது நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் துளையிடும்போது அதிர்வுகளை ஏற்படுத்தின. இதையடுத்து மீட்பு பணி என்பது பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்த துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தான் தற்போது சுரங்கத்தில் 44 மீட்டர் தூரத்துக்கு 800 எம்எம் அளவு கொண்ட பைப் செலுத்தப்பட்டது. மேலும் ஆகர் இயந்திரத்தின் மூலம் இந்த பணி நடந்து வந்த நிலையில் கான்கிரீட் கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் இந்த மீட்பு பணியும் தடைப்பட்டுள்ளது.
தற்போது ஆகர் இயந்திரத்தின் மீட்பு பணிக்கு இடையூறாக உள்ள கம்பிகள் அகற்றப்பட்டு மீட்பு பணி என்பது 13வது நாளாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் பயப்படாமல், மனஅழுத்தத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் சில விளையாட்டுகளை விளையாடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் போலீஸ்-திருடன் விளையாட்டை விளையாடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர தொழிலாளர்களுக்காக லுடோ மற்றும் செஸ் போர்டுகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இதுபோன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடினால் அவர்களின் மனஅழுத்தம் என்பது குறையும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி மனநல ஆலோசனை வழங்கும் டாக்டர் ரோஹித் கோண்ட்வால் கூறுகையில், ‛‛சுரங்க தொழிலாளர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட லுடோ, செஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை சுரங்கத்துக்குள் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏனென்றால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு மனஅழுத்தத்தத்தில் சிக்காமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். தற்போது 41 தொழிலாளர்களும் நலமாக உள்ளனர். தற்போது அவர்கள் மனஅழுத்தத்தை குறைக்க திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுகின்றனர். யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர'' என்றார்.












Click it and Unblock the Notifications