சகிப்பின்மையின் விளைவுகளைத் தான் உலகம் தாங்க முடியாமல் தவிக்கிறது: பிரணாப் வருத்தம்
டெல்லி: சகிப்பின்மைப் பிரச்னையின் கொடூர விளைவுகளைத் தாங்க முடியாமல்தான் இப்போது உலகம் தவித்து வருகிறது. சகிப்பின்மையின் உச்சம்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச இந்தியவியலாளர்களின் முதல் மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 இந்தியவியலாளர்கள் உள்பட வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் என பலர் பங்கேற்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் கலந்து கொண்டார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், சகிப்பின்மைப் பிரச்னையின் கொடூர விளைவுகளைத் தாங்க முடியாமல்தான் இப்போது உலகம் தவித்து வருகிறது. சகிப்பின்மையின் உச்சம்தான் பயங்கரவாத நடவடிக்கைகள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கருத்தை உலகுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவுக்கும் கூட இப்போது இக்கருத்து தேவைப்படுகிறது.
உலகில் நடைபெறும் பல மோசமான சம்பவங்களை நாம் மெளன சாட்சியாக கடந்து செல்கிறோம். அப்படி இருக்காமல், மனித நேயத்தையும், நாகரிக சமூகத்தின் நடைமுறைகளையும் நம்மால் முடிந்த அளவுக்கு பரவச் செய்ய வேண்டும். சக மனிதர்களையே வெறுக்கும், மனோபாவம் மாற வேண்டும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைப்புடன் இருந்து வருவதற்கு நம்மிடம் தொன்றுதொட்டு இருந்து வரும் சகிப்புத்தன்மைதான் காரணம். அதற்கு கேடு விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதனை நாம் முறியடிக்க வேண்டும்.
இந்தியா மிகச்சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட நாடு. அதன் கலை, கலாசாரம், வரலாறு, இலக்கியம், தத்துவத்தில் தேர்ச்சி பெற்ற மேலும் பல இந்தியவியலாளர்கள் உருவாக வேண்டும்.
இந்தியாவின் பராம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் உள்ளிட்டவற்றிலும், யோகா உள்ளிட்ட கலைகளிலும் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications