பரபரப்பான சூழலில் அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் எடியூரப்பா!
கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் முதல்வர் எடியூரப்பா அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
பெங்களூரு கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் முதல்வர் எடியூரப்பா அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
எடியூரப்பா அரசு மீது கர்நாடக சட்டசபையில் இன்னும் சற்றுநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனால் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இதனை உற்று நோக்கி வருகிறது.
இதுவரை பாஜகவுக்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் பாஜக ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்கூட்டியே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்து என்ன?
இதற்காக 13 பக்க ராஜினாமா உரையை எடியூரப்பா தயாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன என்ற பரபரப்போடு கர்நாடக அரசியல் களம் நகர்ந்து வருகிறது.

பரபரப்பான சூழலில் ஆலோசனை
இந்நிலையில் இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் எடியூரப்பா பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் போனில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார் எடியூரப்பா.

பாஜகவினர் சந்தேகம்
எடியூரப்பா அறையில் பாஜகவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமா என்று பாஜகவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் எடியூரப்பா சட்டசபையில் ஒரு மணிநேரம் பேசிவிட்டு ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முரளிதர் ராவ் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications