எடியூரப்பா, ஸ்ரீராமுலு எம்எல்ஏவாக பதவியேற்பு.. எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர்!
கர்நாடக சட்டசபையில் எம்எல்ஏக்களாக பதவியேற்று இருக்கும் எடியூரப்பா, ஸ்ரீராமுலு தங்களது நாடாளுமன்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் எம்எல்ஏக்களாக பதவியேற்று இருக்கும் எடியூரப்பா, ஸ்ரீராமுலு தங்களது நாடாளுமன்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை.

பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த முதல் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு புதிய தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல் நபராக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எம்எல்ஏவாக பதவியேற்றார். வரிசையாக எம்எல்ஏக்கள் பதவியேற்றார்கள். இதில் பாஜக கட்சியை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்எல்ஏவாக பதவியேற்றார்.
இதனால் தற்போது எடியூரப்பா, ஸ்ரீராமுலு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை லோக்சபா சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இரண்டு பேரும் எம்எல்ஏவாக இருப்பதால், தற்போது அவர்களின் எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
எடியூரப்பா ஷிமோகா நாடாளுமன்ற தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஷிகாரிபுரா எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளார். அதேபோல் ஸ்ரீராமுலு பெல்லாரி தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதே தொகுதியில் எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications