புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்! மிளிரும் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிய சகாப்தத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கோயில் கலாச்சார மையமாக மாற்றப்பட இருக்கிறது. எனவே இந்த கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அயோத்தி ரயில் நிலையம் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 1,450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதியதாக மாற்றியமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தில் 3 மாடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மின்தூக்கிகள், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், உடைகளை மாற்றும் அறைகள், குழந்தைகளுக்கான கவனிப்பு அறைகள் காத்திருப்பு அறைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திறப்பு விழாவில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் நிலைய திறப்பு விழாவில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிவேக அம்ரித் பாரத் ரயில்களையும், 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக இது தொடர்பாக தனது x சோஷியல் மீடியா தளத்தில், "பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் புதிய சகாப்தத்தை தொடங்குகிறார்" என்று கூறியுள்ளார்.
ரயில் நிலைத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி ரோட் ஷோவை நடத்தியுள்ளார். இதில் அவருக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பளித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications