வேலைவாய்ப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: வேலைவாய்ப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நல்ல பலனை கொடுத்திருப்பதாகவும், ஏராளமான இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற்றிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதனால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக கூறி வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் மீது மத்திய பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இப்படியாக நடைபெற்றதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடாகும். அதேபோல உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம் என பாஜக கூறி வருகிறது.

இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு. இதற்கு பின்னர் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலும் மாநில அரசு 1 டிரில்லியன் டாலர் வளர்ச்சியை பிரதிபலிக்கும் நோக்கில் பல புதி திட்டங்களையும் அறிவித்தது. இந்த திட்டங்களை செயல்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் எந்த பட்ஜெட்டிலும் இதுபோன்று அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்க 10 முக்கிய துறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்த வெண்டும் என மாநில அரசு முடிவெடுத்தது.
அதன்படி கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், "மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் விரைவில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்களை விநியோகிக்க இருக்கிறோம்.
அதேபோல வேலைவாய்ப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நல்ல பலனளித்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து இளைஞர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றிருந்தனர். ஆனால் இன்று இது வெகுவாக குறைந்திருக்கிறது. இதற்கு காரணம் மாநில அரசு மேற்கொண்ட முயற்சிதான்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications