உத்தரப் பிரதேசத்தின் பெருமைகளை மீட்டெடுத்தது பாஜகதான்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெருமைகளை மீட்டெடுக்க முன்னர் இருந்த கட்சிகள் தவறிவிட்டதாகவும், பாஜகதான் இதனை மீட்டெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், டபுள் என்ஜின் அரசு ட்ரிபிள் என்ஜின் அரசாக மாறியுள்ளதாக யோகி கூறியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது, "மீரட் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவின் முதல் புரட்சி போராட்டம் வெடித்தது. கடந்த 1857ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இந்த புரட்சி வெடித்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியது. அதேபோல 11ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மீரட் மக்கள் முழு அளவில் பங்கேற்று டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக மாற்ற புரட்சி செய்ய வேண்டும். மீரட் குறித்து பாஜக புரட்சிகர சிந்தனையை கொண்டிருக்கிறது.

ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் மீரட் என்பது திருடப்பட்ட கார்களிலிருந்து உதிரி பாகங்களை அகற்றி அதனை பிரித்து விற்கும் நகரமாக அறியப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மீரட் நகருக்கு இந்த பெயரை மாற்றி மீரட் என்றால் வளர்ச்சி மற்றும் தேசியவாதம் பற்றிய நேர்மறையான சிந்தனைக்கு பெயர் பெற்ற நகரம் என்று மாற்றியது. மீரட்டை போலவே இந்தியாவின் பெயரும் சர்வதேச அளவில் வேறுமாதிரி ஒலிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா என்றால் ஏளனமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா மீது சர்வதேச நாடுகளுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுள்ளது. இதற்கும் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் தான் காரணம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியிலிருந்து மீரட் வர சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். ஆனால் பாஜக அரசு 12 வழி விரைவு சாலையை கட்டமைத்தது. இதன் பின்னர் டெல்லியிலிருந்து மீரட்டுக்கு சுமார் 45 நிமிடங்களில் வந்துவிடலாம். சாலை போக்குவரத்து எளிதாக்கப்பட்டதை போல ரயில் போக்குவரத்தையும் எளிதாக்க பாஜக அரசு முயன்று வருகிறது.
இந்த முயற்சியின் பலனாக அடுத்த ஆண்டு டெல்லி-மீரட் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும். அதேபோல மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல ஒரு காலத்தில் 16 மணி நேரம் செலவானது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் நாங்கள் விரைவு சாலைகளை கட்டி எழுப்பினோம். இதனால் 16 மணி நேர பயணம் 6 மணி நேரத்தில் சாத்தியமாகியுள்ளது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் மாநிலத்தின் பெருமைகளை மீட்டெடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெருமைகளை மீட்டெடுக்க முன்னர் இருந்த கட்சிகள் தவறிவிட்டதாகவும், பாஜகதான் இதனை மீட்டெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications