கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. ஒன்றரை வயசு குழந்தையை.. கடலில் தூக்கி வீசிய தாய்.. கணவன் மீதும் பழி!

கள்ளக்காதலுக்காக குழந்தையை கடலில் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காமம் கண்ணை மறைக்க.. ஒன்றரை வயசு குழந்தையை கடலில் தூக்கி வீசி கொன்றுவிட்டார் இளம்தாய்.. குழந்தையை கொன்றதும் இல்லாமல் அந்த பழியை கணவன் மீதும் போட பார்த்தார்... விடுமா போலீஸ்.. கள்ளக்காதலனுக்காக இந்த கொலையை செய்த அப்பெண்ணை அள்ளி உள்ளே வைத்துவிட்டது!

கேரள மாநிலம் கண்ணூர் தையில் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரணவ் - ஷரண்யா.. இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை.

ஷ்ரண்யாவுக்கு வயசு 22 ஆகிறது.. கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு.. அதனால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிரணவ்

பிரணவ்

ஷரண்யா அவர் அம்மா வீட்டில் வசித்துவந்துள்ளார்... 2 நாளைக்கு முன்பு ஷரண்யா பிரணவுக்கு போன் செய்து, தன் வீட்டிற்கு அழைத்தார்.. உடனே பிரணவும் அந்த வீட்டுக்கு சென்றார்.. இரவு லேட் ஆகிவிட்டதால், அங்கேயே தங்கிவிட்டு காலையில் போகுமாறு ஷரண்யா சொல்லவும், பிரணவ் அங்கேயே தங்கிவிட்டார். விடிகாலையில் திடீரென ஷரண்யா அலறினார்... பக்கத்தில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று கதறினார்... இதனால் பிரணவும் அதிர்ச்சியுற்று குழந்தையை தேடினார்.

உளறினர்

உளறினர்

2 பேரும் நீண்டநேரமாக தேடியும் குழந்தை கிடைக்கவில்லை என்பதால், கண்ணூர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடினர்.. அதேபோல பெற்றோரிடமும் விசாரித்தனர். ஆனால், இருவருமே உளறினார்கள்... இதனால் போலீசாருக்கு இவர்கள்மீதுதான் சந்தேகம் அதிகமானது... இந்த சமயத்தில், வீட்டின் பக்கத்தில் உள்ள பீச்சில் குழந்தையின் சடலம் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.. பீச் பாறைகளுக்கு நடுவில் குழந்தையின் சடலம் சிக்கியிருந்தது.. எனவே போலீசார் தம்பதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கடல்நீர்

கடல்நீர்

குழந்தையை கொன்றது பிரணவ் என்று ஷரண்யாவும், ஷரண்யாதான் என்று பிரணவ்-வும் மாறி மாறி சொன்னார்கள்... இறுதியாக ஷரண்யாவின் டிரஸ்ஸை போலீசார் வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த டிரஸ்ஸில் கடல் நீர் பட்டிருந்தது தெரியவந்தது...அதனால் அவர்தான் பீச்சுக்கு குழந்தையை தூக்கி சென்று கொன்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.. விசாரணையில், குழந்தையை கடலில் வீசி கொலை செய்ததை ஷரண்யா ஒப்புக்கொண்டார்.

சோதனை

சோதனை

இதன்பிறகு அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில் ஒரு இளைஞருடன் நிறையமுறை ஷரண்யா பேசி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கேட்டதற்கு சரண்யா சொன்னதாவது: "அவர் 6 மாசத்துக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் எனக்கு பழக்கமானார்... நாளடைவில் எங்களுக்குள் காதல் வந்துவிட்டது.. அவரையே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன்.. அதுக்கு குழந்தை தடையா இருக்கும் என்பதால், அதனை கொலை செய்ய முடிவு செய்தேன்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

ஆனால், குழந்தை என்னிடம் இருப்பதால், பழி என் மேல் வந்துவிடும் என்று நினைத்து, கணவரை திடீரென வரவழைத்தேன். ஏற்கனவே எங்களுக்குள் பிரச்சனை இருப்பதால், குழந்தையை அவர்தான் கொலை செய்தார் என்று பழியை போட்டுவிடலாம் என பிளான் பண்ணினேன்" என்றார். இப்போது ஷரண்யாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குழந்தையின் சடலம் அலையில் அடித்து கொண்டு வந்து பாறைகளுக்கு நடுவில் கரை ஒதுங்கவேதான் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. பெற்ற தாய், நடுராத்திரி தன் குழந்தையை தூக்கி சென்று கடலில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+