கல்லூரியில் வெடிகுண்டு பீதி கிளப்பிய வாலிபர் கைது: கொலை செய்ததாகவும் ஒப்புதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் போனில் பேசிய மர்ம நபர் திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நள்ளிரவில் குண்டு வெடிக்கும் என தெரிவித்து விட்டு போனை துண்டித்தார்.
இதையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் தனிஷ்லால், பாண்டி, சிவசண்முகம், சிறப்பு எஸ்ஐ வைரவன் மற்றும் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், கைரேகை நிபுணர்கள், உளவுத்துறையினர் நள்ளிரவில் தனியார் கல்லூரிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து அழைப்பு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த காந்தி மகன் பாலமுருகன், இவரது நண்பர் பொன்பாண்டி மகன் கதிரேசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி -திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து ராணிமகாராஜபுரம் செல்லும் பாதையில் நின்ற பாலமுருகனை தனிப்படையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த பூக்கடை ஊழியரான முருகானந்தம் என்பவரை கொலை செய்ததாக போலீசாரிடம் பாலமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள கதிரேசனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் வெடிகுண்டு பீதி கிளப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications