Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 குழந்தைகள் பெற்ற 39 வயது பெண்ணுடன் 21 வயது வாலிபருக்கு காதலாம்! கண்டுபிடித்த அப்பா.. உடைந்த மண்டை

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை சரமாரியாக தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தந்தையை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி அதனை தனது காதலிக்கு வீடியோ கால் செய்து காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் சித்தூரை சேர்ந்தவர் டில்லி பாபு. இவருக்கு 21 வயதில் பரத் எனும் மகன் இருக்கிறார். சிறுவயதிலேயே பள்ளி படிப்பை கைவிட்ட பரத் கூலி வேலை செய்து அன்றாடம் பிழப்பை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர் வீட்டில் சரவர பணத்தை தராமல் இருந்திருக்கிறார். இது குறித்து விசாரித்த தந்தை டில்லி பாபுவுக்கும் பரத்துக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

பரத்துக்கு குடி, சிகரெட், போதை எவ்வித தீய பழக்கமும் கிடையாது. இப்படி இருக்கையில் பணம் எப்படி செலவாகிறது என்று தந்தை டில்லி பாபுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து மகன் பரத்தை பின்தொடர்ந்து பார்க்கையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 39 வயதாகும் கமலாவுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

விவாகரத்து

விவாகரத்து

இந்நிலையில் அவரது கணவர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதனால் பரத்துக்கும், கமலாவுக்கும் இடையே ஆழமான உறவு ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பாதிக்கும் பணத்தை கமலாவுக்கும் கமலாவின் குடும்பத்திற்கும் பரத் செலவழித்து வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த பரத்தின் தந்தை டில்லி பாபு பரத் கடுமையாக கண்டித்திருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் பரத் இந்த தொடர்பை கைவிடவில்லை. எனவே தினந்தோறும் பரத்தின் வீட்டில் பிரச்னை மேலெழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் டில்லி பாபு, கமலாவின் வீட்டுக்கு சென்று பஞ்சாயத்து செய்திருக்கிறார்.

 காவல் நிலையம்

காவல் நிலையம்

அப்போதும் இது முடிவுக்கு வரவில்லை. எனவே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறையினர் கமலாவையும், பரத்தையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். இதனால் தான் அவமானமடைந்ததாக உணர்ந்த கமலா, பரத்திடம் புலம்ப பிரச்னை பெரியதாக வெடித்துள்ளது. நேற்று இரவு ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்த பரத் தனது தந்தையை இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் டில்லி பாபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதையும் கமலாவுக்கு வீடியோ கால் போட்டு காட்டியிருக்கிறார் பரத்.

 வீடியோ கால்

வீடியோ கால்

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் டில்லி பாபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "இது ஒரு சிக்கலான வழக்கு. பரத்துக்கும், கமலாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது குறித்து பரத்தின் தந்தை எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதால் ஆத்திரமடைந்த பரத் தனது தந்தையை தாக்கியுள்ளார். தாக்குதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் பரத் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

விசாரணை

விசாரணை

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது டில்லி பாபு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்" என்று கூறியுள்ளார். வயதுக்கு மீறிய பெண்ணுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் சித்தூரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+