முத்தம் தர விடாமல் தடுத்தார்.. அதான் தள்ளிவிட்டேன்.. மாணவியை கொன்ற இளைஞன் திடுக் வாக்குமூலம்!
பள்ளி மாணவியை கொன்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜபல்பூர்: முத்தம் தர என்னை விடவே இல்லை.. அதான் கீழே தள்ளி விட்டேன்.. என்று பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவி பிங்கி. இவருக்கு வயது 18. அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் போன வியாழக்கிழமை, பிஜாபுரி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். ஆனால் அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. இதனால் பதட்டமும், பயமும் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் மாணவியை தேடி பார்த்தும், கடைசியில் போலீசில் புகார் தந்தனர்.
அதனடிப்படையில் போலீசாரும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மாணவியின் சடலம் அந்த காட்டுப்பகுதிக்குள் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். உடம்பெல்லாம் மாணவிக்கு காயம் இருந்தது. தலையின் பின்பக்கம் பயங்கரமாக அடிபட்டு ரத்தம் உறைந்திருந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் ஆண் நண்பர் ராமன் சிங் சயான் என்பவர் சிக்கினார். இவருடன்தான் மாணவி காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு யாருமில்லாத தனிமையை பயன்படுத்தி கொண்ட ராமன் சிங் சயான், மாணவிக்கு முத்தம் தர முயன்றுள்ளார்.
ஆனால் மாணவி அதை தடுத்து, மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமன்சிங், மாணவியை கீழே பின்பக்கமாக தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரது தலை அங்கிருந்த ஒரு பெரிய கல்லில் பட்டு பலத்த காயமடைந்து, அங்கேயே உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமன்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications