For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்!

Google Oneindia Tamil News

அமராவதி: இன்னும் தேர்தல் முடிவுகளே வரவில்லை. அதற்குள் ஜெகன்மோகன் ரெட்டியை அவரது ஆதரவாளர்கள் முதல்வராக்கி அழகு பார்த்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஆந்திரத்தில் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

அடச்சே.. தூக்கி வளர்த்த அதிமுகவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார் இந்த செந்தில்! அடச்சே.. தூக்கி வளர்த்த அதிமுகவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார் இந்த செந்தில்!

25 தொகுதி

25 தொகுதி

மொத்தம் 175 சட்டசபை மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் நடைபெற்ற இந்த தேர்தலில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகும்.

மறைவுக்கு பின்னர்

மறைவுக்கு பின்னர்

ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை கவனித்து வருகிறார். இந்த தேர்தல் முடிவுகள் வரும் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

ஆனால் அதற்குள்ளாகவே ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் "ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, மாண்புமிகு முதல்வர்" என பொறித்த பெயர் பலகையை ரெடி செய்து கொண்டு அதகளப்படுத்துகின்றனர். இவர்கள் வடிவமைத்த இந்த பெயர் பலகை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்குள் இப்படியா?

அதற்குள் இப்படியா?

இன்னும் தேர்தல் முடிவுகளே வரவில்லை. அதற்குள் தொண்டர்கள் இப்படி கொண்டாடுகிறார்களே என மக்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதை யார் செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அக்கட்சியின் சுயவிளம்பரத்துக்காக இப்படி பெயர் பலகை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

English summary
The nameplate of YS Jagan Mohan Reddy tagged along with the designation of Honorable Chief Minister pics has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X