For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லக்வி விடுதலை.. தெஹ்ரிக் தலிபான்கள், இந்தியாவுடன் 'யுத்தத்துக்கு' தயாராகிறது பாகிஸ்தான்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை தாக்குதல் வழக்கின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஷகி உர் ரஹ்மானை ஜாமீனில் விடுவித்திருப்பதன் மூலம் இந்தியா மற்றும் தெஹ்ரிக் இ தலிபான்களுடன் உக்கிர யுத்தத்துக்கு பாகிஸ்தான் தயாரகிவிட்டதாகவே பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

2002ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பாவின் மிகப் பெரிய பயிற்சி முகாமான முர்டிக் முகாமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏனெனில் லஷ்கர் இ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத்தை கொல்வதற்கான சதி முயற்சி முன்னர் நிகழ்ந்து என்பதால்தான் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

Zaki-ur-Rehman Lakhvi-Hafiz Saeed combo to hit at Tehrik-e-Taliban

தெஹ்ரிக் இ தலிபானைப் பொறுத்தவரையில் ஹபீஸ் சயீத்தின் மரணம் பெரும் உத்வேகமாக இருக்கும் எனக் கருதுகிறது. ஏனெனில் தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து மும்முரமாக போரிடுவது லஷ்கர் இ தொய்பாதான்.. தெஹ்ரிக் இ தலிபானை ஒழிக்கும் போரில் பல முறை ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து போரிட்டும் இருக்கின்றனர்.

தெஹ்ரிக் இ தலிபானைப் பொறுத்தவரையில் லஷ்கர் இ தொய்பா என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவு என்றுதான் கருதுகிறது. இத்தனைக்கும் மூளையாக இருப்பது ஹபீஸ் சயீத் என்றே தெஹ்ரிக் எண்ணுகிறது. இதனால்தான் சயீத் ஒழிக்கப்பட்டால் லஷ்கர் இ தொய்பா சிதைந்து போகும் என தெஹ்ரிக் கருதுகிறது.

லஷ்கர் இ தொய்பா எப்போதும் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரொம்பவே விசுவாசமான அமைப்பு. அத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துக்காக போராடவும் தயாரான இயக்கம்தான் லஷ்கர் இ தொய்பா.

இந்த நிலையில் ஷகி உர் ரஹ்மான் லக்வி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1990களில் இருந்து லஷ்கர் இ தொய்பாவின் கட்டளை தளபதியாக இருப்பது லக்விதான்.

இந்தியாவுக்கு எதிரான மோதல்களில் எந்த ஒரு அச்ச உணர்வுமே இல்லாமல் மிக மோசமான வியூகத்தையும் மோதலை மேற்கொள்ளக் கூடியவர் லக்வி. தற்போது தெஹ்ரி இ தலிபானுக்கு எதிராக பாகிஸ்தான் வியூகம் வகுத்து வரும் நிலையில் லக்வி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அத்துடன் மட்டுமல்ல லக்வியின் விடுதலை மூலம் காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாத இயக்கம் இன்னும் முழுவீச்சில் தீவிரமாக தாக்குதலை நடத்த வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தெஹ்ரிக் இ தலிபான் தானை ஒழிப்பதுதான் தற்போது முக்கியமாக இருந்தாலும் ஜம்மு காஷ்மீரிலும் வாலாட்டவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.

English summary
There is a great sense of desperation within the Pakistan army which is doing its best to neutralize the Tehrik-e-Taliban. In many of the proxy wars that Paksitan stages, there is one against the TTP too and it is the Lashkar-e-Tayiba which fights for the Pakistan army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X