சீனாவில் உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் உணவு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும், காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் ஷவ்குவாங் நகரில் உள்ளது லாங்யுவான் உணவு நிறுவனம். நேற்றிரவு சுமார் 7மணி அளவில் அந்த உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட்து.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக தீயில் சிக்கி 18 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்கள். மேலும், காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அத்தொழிற்சாலையின் மேலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications