அதிகாலையில் திடுக்கிட்ட மக்கள்.. இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 மற்றும் 5.8 என்ற அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கெபுலாவான் பது தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

2 consecutive powerful earthquakes in Indonesia - People panic

வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் ஒருமுறை அதே பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் ரிங்க் ஆப் ஃபயர் பகுதியில் இந்தோனேசியா அமைந்து இருப்பதால் அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

2 consecutive powerful earthquakes in Indonesia - People panic
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+